tamilnadu epaper

எங்கள் ஊர் பசுமலை சிறப்புகள்

எங்கள் ஊர் பசுமலை சிறப்புகள்

பசுமை மிகுந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகம் கொண்ட சிறு குன்று (பசுமலை) சார்ந்த ஊர் பசுமலை ஆகும். சங்க காலம் தொட்டே இயங்கி வரும் மதுரை மாநகரில் அந்நகரைப் போலவே அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் வாழும் எழில் மிகுந்த இடம் பசுமலை. தேசியம் எனது உடல்; தெய்வீகம் எனது உயிர்'என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவரான 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்', நூற்பாலை சம்பந்தமாக 'மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பு' என்ற தொழிற்சங்கம் ஏற்படுத்தியது பசுமலையில் தான். கேட்  வே என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று, பசுமலையின் குன்றின் மீது அமைந்துள்ளது.மதுரை நகரின் பல பகுதிகளை சாலை மார்க்கமாக பசுமலை இணைக்கிறது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலை, பசுமலை வழியாகச் செல்கிறது. அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்து பணிமனை ஒன்று பசுமலையில் உள்ளது. மதுரை - பெரியார் பேருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.அருகிலுள்ள திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது. மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. 

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆரம்பத்தில் சில ஆண்டுகள் கல்வி கற்ற

பசுமலை மேல்நிலைப்பள்ளி இங்குதான் உள்ளது. 

 

மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு இசைக் கல்லூரி பசுமலையில் தான் அமைந்துள்ளனர். பசுமலையிலிருந்து இரட்டை கிலோமீட்டர் தூரத்தில் திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. பசுமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் மதுரை கலைக் கல்லூரியும், தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் அமையப்பெற்றுள்ளன. 

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இங்கிருந்து மிக அருகில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

 

தென்னிந்திய திருச்சபையின் கிளை ஒன்று பசுமலையில் உள்ளது அதில் முதியோர் வாழ்வில்லம் ஒன்றும் உள்ளடங்கி இருக்கிறது.