tamilnadu epaper

எங்கள் ஊர் புதுக்கோட்டை சிறப்பு

எங்கள் ஊர் புதுக்கோட்டை சிறப்பு

1974 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று திருச்சி மாவட்டத்தில் சில பகுதிகளையும் தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளை இணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவானது புதுக்கோட்டையில் பெயர் பெற்ற குடவரை கோவில் உள்ள பிரகதாம்பாள் கோவில் பிரசித்தி பெற்றது .சிவபெருமான் காமதேனுக்கு மோட்சம் தர காரணமாய் இருந்த சிவ தலம் இது .கிழக்கு பார்த்திருக்கும் கோகனேஸ்வரர் சன்னிதி குடைவரைக் கோயில். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேரில் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை கூறுவதால் இது பேசும் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது.

            இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் எதுவும் பொருள் தொலைந்தால் அரைக்காச அம்மனுக்கு காணிக்கை எனக்கூறி சிறிது வெல்லத்தை எடுத்து வைத்து விட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும்.

புதுக்கோட்டையில் பல்வேறு சிறப்புகள்;

           ஆசியாவிலேயே மிகப்பெரிய அனந்த சயனப் பெருமாள் திருமயம் ஊரில் உள்ளது..

          உலகில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் பாவங்களையும் போக்குவது திருமயம் சத்திய புஷ்கரணி.

           உலகில் சிவன்- பெருமாள் ஒருங்கே கிரிவலம் வரும் ஊர் திருமயம் .

          புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரே திவ்ய தேசம் திருமயம் ஆகும்.

          ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை புதுக்கோட்டை குலமங்கலம் பெருங்காரையடி மீட்ட அய்யனார் கோவில் குதிரை ஆகும் .

            தென்னிந்தியாவில் மிகப்பெரிய சிவன் சிலை புதுக்கோட்டை கீரமங்கலத்தில் உள்ளது.

            தமிழகத்தில் சப்த கன்னியர்கள் எனப்படும்

1) திருவப்பூர் முத்துமாரியம்மன்

2) இளஞ்சாவூர் முத்துமாரியம்மன்

3)கொன்னையூர் முத்துமாரியம்மன்

4)நார்த்தாமலை முத்துமாரியம்மன்

5) கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்

6)கண்ணனூர் முத்துமாரியம்மன்

7) சமயபுரம் முத்துமாரியம்மன் ஆகிய ஏழு சப்த கன்னியர்களான முத்துமாரியம்மன் தலங்களில் முதல் நாலு சகோதரிகள் வீற்றிருப்பது புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.

          தமிழ்நாட்டில் சமணர்கள் தங்கி குகை மலைகள் நிறைந்த மாவட்டம் புதுக்கோட்டை.

          ராஜராஜசோழன் பதவி ஏற்ற பிறகு முதலில் கட்டிய கோயில் புதுக்கோட்டை நார்த்தமலை அருகில் உள்ளது .

             தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டை அருங்காட்சியகம்.

             தமிழகத்தில் இரண்டாவது பெரிய அரசு அச்சகம் புதுக்கோட்டை.

              இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாவட்ட அலுவலகம் உள்ள ஊர் புதுக்கோட்டை .(99 ஏக்கர் 99 சென்ட் )

             ஹெலிகாப்டரில் புனித நீரில் புனித நீரும் பூக்களும் தூவி ராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோவில் புதுக்கோட்டை கொத்தமங்கலம் கிராமம் .

              முதன் முதலில் கார் வாங்கியது புதுக்கோட்டை மன்னர் .

             இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பிறந்த ஊர் புதுக்கோட்டை .

              பாரிஸ் ,புதுச்சேரி நகரை போல அழகான நகர அமைப்பையும் நேர் வீதிகளையும் கொண்ட ஊர் புதுக்கோட்டை.

            புதுக்கோட்டை அருகே உள்ள சித்தன்னவாசல் அருமையான சுற்றுலா ஸ்தலமாகும்.இங்குள்ள குகை ஓவியங்கள் சமணர்காலத்து கி.பி 7ம் நூற்றாண்டை சேர்ந்தது. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களால் வரையப்பட்டவை.

சித்திரங்கள் சூழ்ந்த சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சுற்றுலா தளமாக இருக்கிறது. தினந்தோறும் உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் சித்தன்னவாசல் வந்து ஓவியங்களை கண்டு வியந்து செல்கின்றனர்.

  பழமையும் ,பொலிவும் கொண்ட புதுக்கோட்டை நகருக்கு வாருங்கள்.. புதுக்கோட்டை நகரில் பெருமையை கண்டு களியுங்கள்.

கட்டுரை எழுதியவர்:

வெ.விஷ்வா,செங்குந்தர் புரம்,மணமேல்குடி-