tamilnadu epaper

எங்க ஊர் ஏரல் சிறப்பு ஏரல்

எங்க ஊர் ஏரல் சிறப்பு  ஏரல்

எங்க ஊர் ஏரல் சிறப்பு

 

ஏரல் என்றவுடன் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊர் என்பது தான் நினைவில் வரும். .தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஊர் .இந்த ஊரில் கீரை,வாழை ,தென்னை நெல்,வெற்றிலை விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது.

 

இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா மற்றும் மூன்றாவது பெரிய வணிக நகரமாகும்.

 

தென்மாவட்டத்தில் ஏரல் பித்தளை, வெண்கலம் பாத்திரங்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்றது.தற்போது பொதுமக்களுக்கு இந்த வெண்கலப்பொருட்கள் மீது இருந்த மோகம் குறைந்து விட்டதால் அத்தொழில் நலிவடைந்து வருகிறது.

 

பூந்தியை மாவு போல் இடித்து மிருதுவாக தயாரிக்கப்படும் லட்டு,பருமனான மிக்ஸர்,பொரித்த பரோட்டா,அல்வா,சமோசா என்றால் ஸ்பெஷல்ஸ் !

 

இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சேர்மன் அருணாச்சல சுவாமிகள் கோயில் ஒரு வழிபாட்டு மற்றும் சமாதிக் கோயில் ஆகும். இங்கு சேர்மன் அருணாசல சுவாமி என்பவரின் சமாதி, சிவலிங்கத்துடன் அமைந்துள்ளது.இது இங்குள்ள பிரசித்தப்பெற்ற வழிபாட்டு தலமாகும் .

 

மேலும் இங்குள்ள சவுக்கை முத்தாரம்மன் கோவில் ,நட்மாறி கொண்ட அம்மன் கோவில்,புனித சூசையப்பர் ஆலயம்,ஒத்தாசை மாதா ஆலயம்,பெரிய மணரா பள்ளிவாசல்,புதுமனை பள்ளிவாசல் போன்ற மும்மதத்தினரின் வழிபாட்டு தளங்களும் உள்ளன.

 

பயில்வான் ரங்கநாதன்,இமான் அண்ணாச்சி போன்ற திரைப்பட நடிகர்களின் சொந்த ஊர் ஏரல் தான்.

 

தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்று சொல்லப்படுவது ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவிலாகும்..கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது.

 

ஏரல் அருகே உள்ள கொற்கை என்ற இடம் பாண்டியர்களின் முதல் தலைநகரமாகவும்,கொற்கை பாண்டியர்களின் முத்து நகரமாகவும்,, பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும், பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்துள்ளது. காலமாற்றமும் கடல்கோள் மாற்றமும் கொற்கையைத் தூர்த்து விட்டு, கடலை இன்னும் கிழக்கு நோக்கி உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.இப்போது அது சாதாரண சிற்றூராக காட்சியளிக்கிறது.

 

எ.முகமது ஹுமாயூன்

நாகர்கோவில்