tamilnadu epaper

எதற்காக

எதற்காக


பூமியின் மீது படர்ந்து 

அதன் அளவற்ற

மகரந்தங்களை

மகிழ்ச்சியோடு ஏந்திக்கொண்டு

சிறகடிக்கிறேன்…


ஏந்தும் மகரந்தங்களை

மன மலர்களில்

கொண்டுசேர்க்க ஆவலோடு முனைகிறேன்…

மலர்களின் சம்மதம் குறித்த

எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி 


இந்த முயற்சிகூட மேற்கொள்ளாவிடில்

இந்த பூமி

இந்தப் பிறவி

இந்த நான்

இந்தக் கவிதை

யாவும் எதற்காகவோ ?


-ம.திருவள்ளுவர்