கண்ணு காது வைத்து உலகம் பேசுமே...
ஐம்பொறிக்குள் மனிதன் ஆட்டம் அடங்குமே.!
என்னைப்பாரு.. கண்ணைப்பாரு.. கண்டதையும் பார்க்காதே...
சொன்னா கேளு.. நல்லா கேளு.. கேட்காது இருப்பதற்கா காது.! லேது.!
மோந்து பாரு.. முகர்ந்து பாரு.. மூச்சுக்குள்ளே இருக்குதடா.. ஊரு. பெத்தப் பேரு.!
வாயை மூடு.. வாசல் மூடு.! திறந்து போட்டா.. தீய சொற்கள் நுழைந்துவிடும் வீடு! ஆமா மூடு.!
உடம்பு ஒரு கூடு பாரு.. உயிர் வந்து தங்கும் வீடு
வாடகைக்கு இருப்பதற்கே வீடு.!
ஐம்புலமே ஒரு காடு.. பற்றி எரிந்து படுத்தும் பாடு.. ஐம்புலனின் பின்னாலே ஓடாதே நில்லு.! அந்த நாளில் சித்தர்கள் சொல்லி வைத்தச் சொல்லு.!
-வே.கல்யாண்குமார்