ஓடும் இரயிலின்
சாளரத்தின் வழியே …
ஒளி ஊடுறுவ
மழை உயிர் நனைக்க
வேலி வேர் காக்க
உரமிடப்பட்டுப்
பண்பட்ட நிலத்திலிருந்து
விளைந்திருக்கிறது பயிர்….
ஒரே
பரப்பில்
நிறத்தில்
உயரத்தில் ….
உழவனை
எண்ணிப் பார்க்கப் பார்க்க
இதமாயிருக்கிறது உயிருக்கு
இடையே
ஒரே ஒரு கேள்வியும் முளைக்கிறது
“நிலம் போல
மனம் பண்பட மனிதன் என்ன செய்யலாம்?”
தீப ஒளி நிறைக்குமா இருள் படிந்த
மூலைகளையெல்லாம் …
வேறென்ன…
ஒரு காஃபி சாப்பிடலாம் வாங்க
•••••••••••••••••••
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி