என்னங்க... உங்களுக்காக நான் இன்னைக்கு பார்த்து பார்த்து சமைத்து சாப்பாடு கொடுத்து அனுப்பினேன்... கடைசியில சாப்பிடாம இப்படி பண்ணிட்டீங்களே- என வேகத்தோடு கேட்டாள்"
மனைவி விமலா ...
இல்லம்மா சாப்பிட்டேன் அருமையா இருந்தது ...
அதுலயும் அந்த வாழைக்காய் வறுவல் சூப்பர்
என்று சுரேஷ் கூற...
நிறுத்துங்க பொய் சொல்லாதீங்க ...
இன்னைக்கு நீங்க சாப்பிடல..
இன்று மதியம்
நீங்க பாட்டுக்கு உங்க வாய்க்கு ருசியா ஓட்டல்ல போய் சாப்பிட்டு வந்து இருக்கீங்க....
அய்யோ இந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது? யாராவது போட்டுவிட்டுட்டாங்களா..!-
குழம்பியவாறு இல்ல விமலா...
என்று இழுத்தான் சுரேஷ்...
உங்களுக்கு கொடுத்த சாப்பாட்டை ஆபிஸ்ல யாருக்காவது கொடுத்துட்டீங்க இதுதான் உண்மை..
கையும் களமாக மாட்டிக் கொண்ட சுரேஷ்
மனைவியிடம் கொஞ்சலானான் குழைந்து பேசி....
எதுவும் எடுபடலே..
விமலா கோபப்பட்டு படுக்கை அறையில் சென்று குப்புறப் படுத்துக்கொண்டு அழுதாள்.
விம்மு குட்டி அழாதேடி..
முகத்தை திருப்பிக் கொண்டாள்
அப்படி முகம் திருப்பிய பக்கத்துக்கு படுத்து..
அவள் முகவாய் கட்டை பிடித்து இங்க பார்
எங்க அலுவலகத்துக்கு புதிதாக ஒரு அதிகாரி ஜாயின் பண்ணினார் ...
அவருக்கு முதல் நாள் சாப்பாடு எதுவும் எடுத்து வரல அதான் அவர கடைக்கு கூட்டிட்டு போய்
நானும் சாப்பிட்டு வந்தேன்.
பிறகு நீ தந்த சாப்பாடு வேஸ்ட் ஆகி விடக்கூடாது-னு
எங்க ஆபீஸ்
பையன் கிட்ட குடுத்து சாப்பிட சொல்லிட்டேன்.
சாரிம்மா
என்று மன்னிப்பு கேட்டான் சமாதானமாக...
விமலா என் செல்லமாக
கொஞ்சியபடி சுரேஷ் கேட்டான்
அது சரி நான் சாப்பிடவில்லை என்று எப்படி கண்டுபிடிச்சே..?
உங்க வங்கனம் எனக்கு தெரியாது?
வீட்ல சின்னதட்டையே எடுத்து வைக்க மாட்டீங்க
இந்த லட்சணத்துல டிபன் பாக்ஸ கழுவி கொண்டு வந்து கொடுத்தா?
அத வச்சு தான் கண்டுபிடிச்சேன் நீங்க வேற யாருக்கோ சாப்பிட கொடுத்து இருக்கீங்கன்னு
என விமலா கூற..
அடேய்..! பையா
இப்படி டிபன் பாக்ஸ கழுவி கொடுத்து என்னை இவ கழுவி கழுவி ஊத்துற மாதிரி செஞ்சிட்டியேடா..
-இரா. ரமேஷ்பாபு