கட்டுக் கட்டாக
கையிலே பணமே
குட்டி போட்ட
முதலீடு குறையின்றி
வட்டியாய் கையில்
வந்து சேர்ந்ததோ
பெட்டியில் பூட்டும்முன்
பெரியதாய் செலவுவர
தொட்டுப் பார்த்து
செலவுக்கு சரிவருமா
என்றே எண்ணிடும்
மனிதனின் மனப்போக்கு!!
நன்றே அதுவும்
கவனமாய் கையாள!!

-வைரமணி
சென்னை