வகுப்பில் கணக்கு ஆசிரியர், ஒரு மாணவனை பார்த்துக் கேட்டார்..
ரகு கணக்கை முடித்து விட்டாயா என்றார். அதற்கு அந்த மாணவன் இன்னும் இல்லை அய்யா என்றான். அருகில் அமர்ந்து இருந்த இன்னொரு மாணவனைப் பார்த்து ஆசிரியர், பூபதி நீ முடித்து விட்டாயா என்றார். முடித்து விட்டேன் அய்யா என்று அந்த மாணவன் பதில் சொன்னான். அதற்கு ஆசிரியர் அவன் முடித்து விட்டானே நீ ஏண்டா முடிக்கவில்லை என்று ரகுவைக் கடிந்து கொண்டார். அதற்கு ரகு சொன்னான். எனக்கு எதிரி யாரும் இல்லை அய்யா.. ஆனால், பூபதிக்கு நீண்ட காலமாக விரோதி ஒருவன் இருக்கிறான். நேற்றுதான் சந்தர்ப்பம் கிடைத்ததாம்.
அதனால் "அவன் கணக்கை " முடித்து விட்டான் அய்யா என்றான். அதைக் கேட்ட ஆசிரியர் பேரதிர்ச்சி அடைந்தார்.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
4, சுபி இல்லம்
கிழக்குப் பூங்கா தெரு கோபிசெட்டிபாளையம் 638452