காட்சி பிழை ...
கண்ணால் காண்பதும் பொய் ..காதால் கேட்பதும் பொய் ..தீர விசாரிப்பதே
மெய்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ...ஆனா பிரச்சனைன்னு வரும்
போது பெரும்பாலானவங்க தீர விசாரிக்கிறதே இல்லை .. நான் மட்டும் என்ன
விதிவிலக்கா ...??
நான் பார்த்தது பொய்யா இருக்க கூடாதான்னு மனசு தோணுச்சு ..வேலை
முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ஆசையா என் பொண்டாட்டி கமலியை கட்டி
பிடிச்சேன் ...நான் யூஸ் பண்ணாத ப்ராண்ட் செண்ட் அது நிச்சயமாக ஒரு ஆண்
பயன் படுத்த கூடிய புதிய செண்டின் மணம் அவள் மீது வீசியது ..தலை வேறு
களைந்து இருந்தது ...கட்டிலில் பெட்ஷீட்டும் களைந்து கிடந்தது ...
கோபம் தலைக்கு ஏறியது ..துரோகம் செய்த இவளை கத்தியால் குத்தி
கொல்வதா?அல்லது ஆத்திரம் தீர அடித்து கொல்வதா ?
சுதாகர் எதுவா இருந்தாலும் நேரடியா அவளிடமே கேள் என புத்தி சொல்லியது
...ஆனா பாழாய் போன மனசு அவளை கொல்ல சொன்னது ?
அடுக்களைக்கு சென்று டீ போட்டு கொண்டு வந்தாள்..என்னங்க வரும் போது
பிரெஷ்ஷா வந்தீங்க ..திடீர்னு முகம் வாடி போச்சு ..சீக்கிரம் டீ குடிச்சிட்டு
குளிச்சிட்டு வாங்க எல்லாம் சரியாய் போய்டும் ...ஒரு பத்து நிமிஷம் முன்னாடி
வந்து இருக்க கூடாதா ?உங்க அக்கா சிங்கப்பூர்ல இருந்து கம்பெனி விஷயமா
ரெண்டு நாள் இந்தியா வந்து இருக்காங்க ..வரும் போது உங்க அக்கா பையன் அந்த
மூணு வயசு வாலுவையும் கொண்டு வந்தாங்க ..அவனே சமாளிக்க
முடியலைங்க ..ஒரே அடம்,கட்டிலிலே ஏறி குதிக்குறது என்ன ?வீட்ல உள்ள
பொருளை எல்லாம் உடைக்கிறது என்ன ஒரே அதக்களம் பண்ணிட்டாங்க ...சீவுன
தலைமுடியை எல்லாம் களைச்சு விட்டுட்டானுங்க ..என்ன தான் இருந்தாலும்
நம்ம வீட்லயும் இந்த மாதிரி ஒரு வாலு இருந்தா ரொம்ப நல்லா தாங்க இருக்கும்
..உங்க அக்கா உங்களுக்காக புதிய செண்ட் எல்லாம் வாங்கி வந்திருக்காங்க
நானும் அடிச்சு பார்த்தேங்க ..ரொம்ப நல்லா இருக்கு ..ரொம்ப காஸ்ட்லியா
இருக்கும்னு நினைக்குறேன் என்று கமலி சொன்னதும் ஓடி சென்று அவளை கட்டி
பிடித்து கொண்டேன் ...கண்களில் கண்ணீர் என்னையும் அறியாமல்
வழிந்தோடியது ..என்னை குழந்தை போல அவள் மடியில் படுக்க வைத்து
கண்ணீரை துடைத்து விட்டாள்....
மனைவி தாயின் மறு அவதாரம்னு சந்தேக புத்திக்கு அப்போதான் உரைத்தது.
-லி .நௌஷாத் கான் -