tamilnadu epaper

காணாமலேகாதல்...

காணாமலேகாதல்...

கலா அந்த கிராமத்திலே
அதிகம் படித்தவள்.அதனால்
ஏதேனும் கடிதம் எழுதவும்
தேவையான எந்த உதவியும் அவளிடம்
கிராம‌மக்கள் வந்து கேட்பார்கள்.அவளும்
இன்முகத்துடன் செய்வாள்.அந்த கிராமத்
தலைவரின் மகள்கலா.பட்டணத்தில்
படித்தப் பொண்ணு
இருந்தாலும் எப்படி
பதவிசாஇருக்கு என்று
ஊரே அவளைப்பாராட்டி
மகிழும்.அந்த ஊரில்விவசாயி ஒருவரின்மகன் பட்டாளத்தில் வேலைசெய்கிறான்.சின்ன
வயதில்‌பார்த்த பழக்கம் கலாவுக்கு.ராமன் படித்து
முடித்து நாட்டுக்குச்சேவை செய்யப் போனான்.அவன்அம்மா
இவளிடம் கடிதம்எழுதச்
சொல்லி மகனுக்கு‌ அனுப்புவாள்.ஒரேமகன்
என்பதால் அவர்கள் குடும்பத்துக்கு வேண்டிய
உதவிகளை செய்து மகிழ்வாள்.அவளுக்குப்
பிடித்த உணவு சமைத்தால் தோட்டத்தில்
விளையும்பழங்கள் காய்கறி கிழங்கு எதுவானாலும் அவளுக்குதான் முதலில்
கொடுத்து மகிழ்வர்.தாய்
வழிசொந்தம் என்பதால்
சலுகை அதிகம்.அவர்கள்
தங்கள் பிள்ளையின்
பெருமைகளை சொல்லும் போது அவளை அறியாமல் காதல் மலர்ந்தது.அவனும் கடிதம் எழுதும்போது அவளைப்பற்றி விசாரித்து எழுதுவான்.
கலாவின் அம்மா அப்பா
இருவரும் அவளது ஆசைக்கு குறுக்கே
நிற்பவர்கள் கிடையாது.
ஒருமுறை கதிருக்கு
கடிதம் எழுதும்போது
அவன்எப்படி இருப்பான்
என்று பார்க்க ஆசைப்பட்டு 
அவன் மீதுள்ள

காதல் மோகத்தில் 
புகைப்படம் கேட்டுஅனுப்பச்

 சொல்லி‌எழுதினாள்.
அவன்அம்மாகேட்டதாகச்
சொன்னாள்.அடுத்து அவன்
கடிதத்தை ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.ஆனால்
பத்துநாட்கள் சென்றும்
கதிரிடம் இருந்து கடிதம்
வரவில்லை.மெதுவாக
மாமனை விசாரித்தாள்.
அவரோ கடிதம் வந்தால்
உன்னிடம் தானே படிக்க
எடுத்து வருவேன் என்றார்.கலாவிற்கு எந்த
வேலையும் ஓடவில்லை.
மெதுவாக காலாற நடந்தால்அவன் நினைப்பு மறையுமா என்று தாயிடம் சொல்லி
விட்டு நடந்தவள் யார்
மீதோ மோதி கீழே விழப்
போனாள்.அவளைஅன்போடு ஆதரவாக ஒருகரம் பற்றி நிறுத்தியது. மெதுவாக
சுதாரித்து நிமிர்ந்தாள்கலா.எதிரே
பட்டாளத்து உடையுடன்
கையில் பெட்டியுடன் கதிர் நின்றான்மிடுக்குடன்
ராசாவைப்போல்.நீங்கள்
என்றுதயங்கினாள்கலா.
நான்கதிர்.உன்னைப்
பார்க்கும் ஆவலில் விடுப்பு எடுத்து ஓடோடி
வந்தேன்.நமக்காக மாமன்மகள் ஏங்கித்தீராக்காதலுடன்
தவிக்கிறாளே என்றுகதிர்
சிரித்தபடி கூறினான்.
நான்ஏன் உங்களுக்கு
ஏங்கவேண்டும் என்றுபொய்கோபத்துடன்
கேட்டாள்கலா.அப்படியானால் போட்டோ எதற்காம்
என்றான்கதிர்.அது அத்தைகேட்டு எழுதச்
சொன்னார்கள் என்றாள்கலா.அவர்களுக்கு என்முகம் அதற்குள்
மறந்து விட்டதாஎன்றான்கதிர்.
கலா உண்மை உணர்ந்து
வெட்கத்துடன்தலை
குனிந்தாள்.மெல்ல அவளைத்
தொட்டு நிமிர்த்திய கதிர்
என்னாலும் உன்னைப்
பார்த்த பிறகு விட்டுச்
செல்ல மனமில்லை.என்றான்
கதிர்.இருவரும் பேசியதை கவனித்த
அப்பாக்கள் திருமணத்திற்கு நாள்
குறிக்க கிளம்பினர்.
வீட்டுக்குத் திரும்பிய
இருவரும்‌ எப்படி தங்கள்
காதலைச் சொல்வது என்று தயங்கினர்.கதிர்
குளித்து சாப்பிட்டு
முடித்தவுடன் அவன்அப்பா தம்பி உனக்கு பெண்பார்க்கப்
போகலாம் கிளம்பு என்றார்.அவன்திகைத்தான்.
அங்கே கலாவின்
அப்பாவும் உன்னை பெண்பார்கக மாப்பிள்ளை வீட்டார்
வருகிறார்கள் ரெடியாக
இருஎன்றதும் அப்பா வந்து என்று இழுத்தாள்கலா.எதுவாக
இருந்தாலும் பிறகுபேசலாம்.என்றார்.
தந்தையிடம் எப்படிச்
சொல்வது என்று இருவரும் தவித்துநிற்கையில் கலா
வீட்டுக்குவந்ததைப்பார்த்து அப்பாஎன்றான் மகிழ்ச்சியுடன்கதிர்.அவன்
அப்பா நீங்கள் இருவரும் தோட்டத்தில்
பேசியதை நாங்களும்
கேட்டோம்என்றார்கலாவின் அப்பாசிரித்தபடி.
மாப்பிள்ளை நீங்கள்
ஊரிலிருந்து வருவதைப்
பார்த்த கந்தன்சொன்னான்.வண்டி
கட்டிநாங்கள்புறப்பட
அதற்குள்நடந்து வந்த
நீஎன்மகளிடம் பேசுவதைப் பார்த்து மகிழ்ந்தேன்.நாங்கள்
நேரேகோவிலுக்குச்சென்று முகூர்த்தநாள் குறித்தோம் என்றார்.என்பெண் கொஞ்ச நாட்களாக குட்டிப்போட்டபூனைபோல் சுற்றிவந்தாள்.அப்போது
தான் மச்சான் விவரம்
சொன்னான்.
உன்னிடம்
இருந்து கடிதம் வரவில்லை என்பதை.எங்கள்கணக்குத் தப்பவில்லை.நீநேராக
வருவாய்என்றுநினைத்தோம்.எங்கள் அனுபவ
அறிவுசரிதானே.என்றார்.
அவன்வெட்கப்பட்டான்.
என்பெண்அழுதுகொண்டு முரண்டுபிடிக்கிறாள்.
போய்சமாதானப்படுத்துங்கள்என்றார்கலாவின்
அப்பா.அவர்கால்களில்
விழுந்துவணங்கினான்
கதிர்.பெற்றவர்களையும்
வணங்கி கலாவின்முகம்
காண ஓடோடிச் சென்றான்.நாமும் அவர்களை வாழ்த்துவோம்.

நன்றி.வணக்கம்.
தாராமதன்.