Breaking News:
tamilnadu epaper

கால நேரங்கள்

கால நேரங்கள்


நிற்காமல்

ஓடும்

கடிகாரத்தை 

கண்டால்...


நினைவில் 

வெட்டியாய்

போக்கிய

பொழுதுகள்

மனதுக்குள் 

நிற்கும்...


கிழித்துப்

போடும்

நாட்காட்டியை

பார்த்தால்...


இதுவரை

என்னத்தெ

நீ

கிழிச்சே

என்ற

கேள்வி

எனக்குள்

நிற்கும்...


பகல்

முடிந்தால்

முடியாத

காரியங்கள் 

கண்ணை

கட்டும்...


இரவு

வடிந்தால்

அன்றைய

காரியங்கள் 

வரிசை

கட்டும்...


இந்த

கால நேரந்தான்

எனக்கு...


எப்போதும்

எதிரி...

எப்போதும்

துரோகி...

எப்போதும் 

நண்பன்...


எனக்கு

மட்டுமல்ல

மனிதர்

எல்லோருக்குமே...


-ஆறுமுகம் நாகப்பன்