தர்க்கம், வாதம் இவற்றை முட்டாள்களின் பொக்கிஷம் என்பர் !!
சாதாரணமாக நாம் பார்க்கலாம், பிறரை குறை கூறி சண்டைக்கு இருப்பவர்கள் குரல் சிறிது ஓங்கியே இருக்கும். அஸ்திவாரம் இல்லாமல் கத்தி. சண்டையிட்டு வெற்றி பெறுவர்.,ஆங்கிலத்தில் ஒரு பழமொழி
" Never argue with fools. They will drag you down to their Level and defects you with their experience in arguing"
நாம் படித்தவராக, நுட்பம், கண்ணியம் உடையவராக இருந்தால் முட்டாளுடன் வாதாட, சர்ச்சையில் இறங்க மாட்டோம்.
தர்க்கத்தில் இறங்குவார் சில வகைப்படுவர்
அதிக படிப்பறிவில்லாதவர்
படித்திருந்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாதம் செய்வர்
இவர்கள் இருவருமே முட்டாள் கோஷ்டிதான்!!
மற்றொரு வகையான மனிதர் அகங்காரம், திமிருடன் தர்க்கத்தில் இறங்குபவர்.
இதற்கு உதாரணமாக ஒரு ரஷ்ய தேசத்து கதை
காட்டில் நரியும், கழுதையும் தர்க்கத்தில் இறங்கின
கழுதை...புல்லின் நிறம் மஞ்சள்
நரி....இல்லை பச்சைதான்
தர்க்கம் முற்றி அவை சிங்கத்திடம் ஞாயம் கேட்க சென்றது. விஷயத்தை கேட்ட சிங்கம் நரியை சிறையில் தள்ளி, கழுதையை விடுவித்தது.
மிகவும் வருந்திய நரி ,சங்கத்திடம் காரணம் கேட்டது.
',இது என்ன ஞாயம்? புல்லின் நிறம் பச்சைதானே"? என்றது
சிங்கம்," புல்லின் நிறம் பச்சைதான். நீ கழுதையுடன் தர்க்கத்தில் இறங்கியதற்க்காக சிறை தண்டனை" என்றது.
சிலருடன் தர்க்கத்தில் இறங்கவே கூடாது!!
-நளினி கோபாலன்
ஹைதராபாத்