tamilnadu epaper

கூந்தல்

கூந்தல்


கதம்ப மலர்களுக்கு

இடையேக் காரிகையின்

கூந்தல் 


கவி பாடும்…..

தோகை மயிலாடும்….

கருங்கூந்தல்


இடைவரை நீண்ட

நீளமான கூந்தலோடு

நீளுமென் எண்ணங்கள் 


கருங்கடல் அலையா!!

காரிருள் காடா!!

கார்மேகக் கூட்டமா!!


மயிரிழையில் உயிரினைப்

பறிக்கும் விந்தைக்

கற்ற மடந்தையே…


என்னவளே….

உன்னை……

உன் கூந்தலை 

எப்படி வர்ணிக்க….




-நா.பத்மாவதி

சென்னை - 80