tamilnadu epaper

சிங்கப்பூரில் தேர்தல்: நாடாளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூரில் தேர்தல்: நாடாளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாயன்று (ஏப்.15) கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைத்த சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அந்நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 23 முதல் துவங்கும் எனவும் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 3 அன்று நடைபெறும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.