tamilnadu epaper

உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்

உலக சாதனை நிகழ்ச்சியாக  2200 கலைஞர்கள் பரதநாட்டியம்


மயிலாடுதுறை, மே 15–

 

 உலக சாதனை முயற்சியாக, 2,200 கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினர்.


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் சுயம்பு நடராஜர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, உலக சாதனை முயற்சியாக, 2,200 நாட்டிய கலைஞர்கள், நாட்டிய மாணவர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி, நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர். 


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். ‘தில்லை அம்பலம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சினிமா நடன இயக்குனர் கலா, பூம்புகார் எம்.எல்.ஏ., நிவேதா முருகன் கலந்து கொண்டனர்.


நடராஜர் இடது காலை துாக்கி ஆடிய பாதம் வடிவில், நாட்டிய கலைஞர்கள் வரிசையாக நின்று, 22 நிமிடங்கள் பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இந்த நாட்டிய நிகழ்வை, ‘இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்ட் ரெக்கார்ட்’ உலக சாதனையாக பதிவு செய்தது.