மலைபோல்
எதற்கும் அசையா
மனதைப் பெற வேண்டி
மௌன தவமிருக்கும் வேளையில்….
கண்ணிமையில்
குழந்தையின் கைவிரல் பட்டு
மௌனம் கலைய
தாமே திறந்து கொள்ளும் கண்களைத்
தவிர்க்க இயலாத பொழுதில்….
மலையை அசைத்துப் பார்க்கும்
சின்னஞ்சிறு குழந்தையின் குறும்பை
இரசித்தலென்னும் பெருந்தவத்தை
எப்போது அனுபவிக்கப் போகிறாய் ?
என்பர் கேட்காமல் கேட்டு
முகில் போல் தரையில்
தவழ்ந்து போகிறது அச்சிறு தெய்வம்
-ம.திருவள்ளுவர்