tamilnadu epaper

சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம்

 

 

    அமலா ஸ்கூல் பக்கம் இருந்த வெற்று நிலத்தில் ஊர் ஊராய் சுற்றி பாசிமணி, ஊசி, ஊக்கு, சோப்பு, சீப்பு, நாட்டு மருந்துகள் விற்கும் குறவர் கூட்டம் பத்து குடும்பங்கள் டெண்ட் போட்டு சமைத்து அங்கே உண்டு உறங்கி வந்தனர்.

    இந்த கூட்டத்தினருக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு சொந்த வீடு என எதுவும் கிடையாது இருந்தாலும் அவர்கள் பயணிப்பதற்கு இரண்டு வேன் வைத்திருந்தார்கள்.

     தினம் சௌமியா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி அமலா ஸ்கூல் செல்ல தினம் அவள் ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டி இருந்தது.

   அப்படியாய் நேற்று ரோட்டை கடக்கையில் வேகமாய் சீறிக்கொண்டு வந்த கார் அவள் மீது மோத அதே இடத்தில் விழுந்து துடித்தாள்.

     மோதிய கார்காரன் தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த இடத்தை விட்டு கடந்து விட்டான்.

   "அம்மா,,,,,," என பீறிட்டு கத்திய அவளின் சத்தம் கேட்டு பாசிமணி விற்கும் குறவன் தன் வேனை அந்த இடத்திற்கு கொண்டு வர ஒரு சிலர் உதவியோடு வேனுக்குள் சௌமியா பத்திரமாய் நுழைக்கப்பட்டாள். 

    அவள் உடம்பிலிருந்து நிறைய இரத்தம் வெளியேறி ரோட்டில் அப்பியிருந்தது.

     ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பொது சுகாதார நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது

    அவளுக்கு உடமையாக ஓபாலிட்டிவ் பிளட் தேவை என டாக்டர் சொல்ல குறவன் முன்வர அவனின் இரத்தம் அவளுக்கு பொருந்தும் என மருத்துவர் சோதித்து பிறகு அவள் உடம்புக்குள் அவனின் இரத்தம் செலுத்தப்பட்டது.

      அதற்க்குள் அவளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் கதறியபடி மருத்துவ மனைக்குள் நுழைந்தார்கள்.

    அந்த குறவனின் இரத்தம் தன் மகளுக்கு கொடுத்தப்பட்டதை அறிந்த அந்த தாய் அவனை பார்த்து நன்றி சொல்ல விரும்பினாள்.

     அவனை பார்த்தாள் இவனா இவன் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன் புள்ள சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு சாமி பாசிமணி, ஊசி ஏதாவது வாங்கிக்கோங்க கெஞ்சினானே அவனா இவன் இவனை கண்டபடி திட்டி அனுப்பி விட்டேனே என மனதுக்குள் வருந்தினாள்.

     இப்பொழுது அவன் அந்த செளமியாவின் அம்மாவுக்கு சுவாமியாக தெரிந்தான்

     அவனை பார்த்து கண்ணீரோடு கும்பிட்டாள். 

    "இதுல போய் என்ன இருக்கு சுவாமி" என அவனும் கும்பிட்டான். 

    அந்த குறவனின் மனது அப்பழுக்கற்று இருந்தது.

 

கவிமுகில் சுரேஷ்

தருமபுரி