tamilnadu epaper

செர்பியா நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் போராட்டம்

செர்பியா நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் போராட்டம்

செர்பியாவின் நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகளை வீசி எதிர்க்க ட்சியினர் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் நாடாளுமன்றத்திற் குள் வண்ணப் புகைமூட்டம் நிறைந்ததுடன் போராட்ட கோசங்களும் எதிரொலித்தது. இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காயங்களும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டமானது அந்நாட்டில் கடந்த சில மாதமாகவே அதிகரித்து வந்த அரசியல் கொதிநிலையின் வெளிப்பாடு என கூறப்படுகின்றது. 2024 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி செர்பி யாவின் நோவி சாட் என்ற நகரத்தில் இருந்த ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் கொடூரமாக பலியானார்கள். இதற்கு ரயில் நிலைய கட்டமைப்பு மற்றும் பராமரிப்பில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என மக்கள் அந்த விபத்திற்கு நீதி கேட்டு 100 நாட்களு க்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் அதே காலத்தில் கல்வித்துறைக்கு அந்நாட்டு அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கவில்லை எனவும் அதிக நிதியை கல்வி வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒதுக்க வேண்டும் எனவும் அந்நாட்டு மாண வர்கள் தினமும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்கள் அரசியல் கொதிநிலையை அதிகரித்து வந்தது.


இதனைச் சமாளிக்க ஆளும் கட்சி எம்பிக்கள் பல்கலைக்கழகங்களுக்கான (கல்விக்கான) நிதியை அதிகரிக்கும் சட்டத்தில் வாக்களிக்க திட்டமிட்டனர். இது மட்டுமின்றி வேறு சட்டங்களையும் கொண்டுவர ஆளும் கட்சி திட்ட மிட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் பதவி விலக வேண்டும் எனவும் அவரது கட்சி ஆட்சியை விட்டு விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். பிரதமர் மிலோஸ் வுசெவிக் சில வாரங்களுக்கு முன்பே ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. எனினும் இது ஏமாற்று நடவடிக்கை எனவும் ஆளும்கட்சி, ஆட்சியை விட்டு உடனே விலகவேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் போரா ட்டம் நடத்திய அதே நேரத்தில் எதிர்க்கட்சி ஆதரவா ளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே செர் பியா எழுகின்றது! ஆட்சி கவிழும்! என பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.