அன்று.....
வளர்ந்த குழந்தைக்கும்
வளரும் குழந்தைக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
குடும்பம் பார்த்து
குணம் பார்த்து
கல்யாணமாம் கல்யாணம்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
மகிழ்வான செழிப்பான
நிம்மதியானக் காலங்கள்
எண்ணற்ற சந்ததிகள்
ஏற்றமிகு வாழ்வு
இன்று...
மணமுடிக்க....
பத்துப் பொருத்தமும்
பாங்குடனே அமைந்தாலும்
மன(ண)ம் மாறும்
குணப் பொருத்தமின்றி
விவாகரத்துக்கு விரையும்
நீதிமன்றம் நோக்கி..........
-நா.பத்மாவதி
சென்னை- 80