tamilnadu epaper

ட்ரெஸ்

ட்ரெஸ்

படத்துல இருக்கிறது ஒரு பொண்ணு போட்டிருந்த ட்ரெஸ். மேல் சட்டை, பாவாடைக்கு நடுவில ஸ்டைலா ஒரு பெல்ட் வேற இருக்கு. இதை டென்மார்க்ல இருக்கிற ஒரு சமாதியில கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த ட்ரெஸ்க்கு வயசு என்ன தெரியுமா? 1700 BC...! அதாவது சுமார் 4000 ஆண்டுகள் பழமையான உடை....!! அமெரிக்கா கண்டுபிடிச்சு 1000 ஆண்டுகள் கூட முழுசா ஆகலை. ரோம் என்ற நகரம் கூட அப்போ கிடையாது...!

 

அந்த சமையத்தில் பருத்தி இல்லை...! பருத்தியை முதலில் ஆடைக்காகவே விளைவித்து பயன்படுத்தியது க்றிஸ்துவுக்கு 3000 ஆண்டுகள் முன்பு - சிந்து சம வெளி நாகரீகத்தில் தான். இந்தியர்கள்ன்னும் சொல்லலாம்... ஆனால் இப்போ அந்த பகுதி பாகிஸ்தான்ல இருக்கு. தவிர அப்போ இந்தியா என்ற நாடே கிடையாது என்பதால அப்படியே விட்டுறலாம். (எகிப்தியர்களும் பருத்தியை அதே கால கட்டத்தில் பயன்படுத்திருக்காங்க) பருத்தி இல்லாம உடை செய்ய பயன்பட்டது பட்டு. ஆனால் அதுக்கு சீனா தான் ஹோல்சேல் ஓனர்...!

 

ஆக இந்த உடை டென்மார்க்ல தயாரிக்கப்பட்ட அந்த காலத்தில் அங்கே பருத்தி இல்லை என்பதால... ஆட்டு தோல் & ரோமத்தில் இந்த உடை செய்திருக்காங்க. ஆட்டு ரோமத்தில் கருப்பு அல்லது வெள்ளை நிற உடை தான் இருக்க முடியும். ஆனால் ஒரு மாதிரி ப்ரவுன் & சிகப்பு கலந்த இந்த உடைக்கு 'டை' எப்படி வந்தது. அதை செய்ய என்ன பயன்படுத்தினாங்க என்பது தான் இப்போ ஹைலைட்டான மேட்டர்.

 

ஒரு உடைக்கு கலர் கொடுக்க நிறமிகளும் (primary என சொல்லப்படும் கலர்கள்) பின் அந்த நிறத்தை உடையோடு ஒட்ட வைக்க Mordantகளும் தேவை (Mordant என்பது ஒரு கெமிக்கல் ஏஜண்ட்,இது தான் நிரந்தர வண்ணமாக உடையோட நிறமிகள் ஒட்டிக்கொண்டு இருக்க காரணமானவை) அதுக்கு பயன்படுத்துற கெமிக்கல் அமோனியா. ஆனால் அந்த காலத்தில் அமோனியாவை எப்படி கொண்டு வந்தாங்க??

 

Rubia tinctorum அப்படீங்கிற செடியோட சாறு எடுத்து அதில தான் Madder எனப்படும் primary RED செய்திருக்காங்க. இதை வைத்து தான் மஞ்சள், ஆரஞ்ச், ப்ரவுன் முதலிய கலர்கள் கொண்டு வந்திருக்கணும். பச்சை, நீலம் எல்லாம் அப்போ மன்னர்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்த காஸ்ட்லி கலர்கள். அதற்கு Isatis tinctoria என்கிற செடியின் மூலமாக woad எனப்படும் primary BLUE செய்திருக்காங்க.

 

ஆடர்த்தியான சிகப்பையும் நீலத்தையும் வெளிர் நிறமாக்கி வேறு கலர்கள் இணைத்து பல்வேறு மேலும் பல புதிய கலர் கொண்டு வர mordant ஆக அந்த காலத்தில் பயன்பட்டது என்ன தெரியுமா?? மனிதனின் மூத்திரம்...!

 

காப்பர் சல்பேட்டின் அழகான நீலம் நீங்க பார்த்திருப்பீங்க. (க்ளினிக் ப்ளஸ் ஷாம்பூல இருக்கிற கலர்) அதே போல கனிமங்களுக்குன்னு சிறப்பு கலர்கள் உண்டு tin, alum எல்லாம் பயன்படுத்தி பல்வேறு நிறமிகளை கொண்டு வந்திருக்காங்க. அந்த கனிமங்களை கரைக்க யூரின் பயன்பட்டிருக்கு. மனித மூத்திரத்தை பல காலம் ஊற போட்டு அமோனியாவை உருவாக்கி அதை வச்சு ப்ராசஸ் செய்து உடையோட ஒட்ட வச்சிருக்கலாம் என்பது அராய்ச்சியாளர்களின் ஒரு பார்வை.

 

இன்னிக்கும் இந்த டைப்ல ஆட்டு ரோமத்துல மட்டும் தான் ஆடை செய்ய முடியும்ன்னு இருந்திருந்தால்.... எப்படி இருந்திருக்கும்...??

 

துணிக்கடைக்கு பதிலா கசாப்பு கடைக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போயி ஆண்களை எல்லாம் குழந்தைகளை பார்க்க சொல்லிட்டு பொண்ணுங்க எந்த ஆடு நல்ல ஆடுன்னு பார்த்திட்டிருந்திருப்பாங்க... இல்ல!?