ரயில்வே வாரியத் தேர்வெழுதும் தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு 1,500 கி.மீ. தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்ப தாகவும், அதனை தமிழ்நாட்டிற்கு உள் ளேயே மாற்றித் தருமாறும் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள் ளார். இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சு. வெங்க டேசன் எம்.பி. கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத் தப்படும் ‘லோகோ பைலட்’ (ரயில் ஓட்டு நர்)காலி இடங்களுக்கு, ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்தும் கணினி அடிப்படையிலான (Computer Based Test - CBT) தேர்வு 1-இல் தமி ழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். இவர்கள், சிபிடி தேர்வு 2-க்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான சிபிடி தேர்வு-2, மார்ச் 19 அன்று நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற் கான தேர்வு மையங்கள் பெரும்பாலாக தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப் பட்டுள்ளது. பலர், ஆயிரம் கிலோ மீட் டர் கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்ச லுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக தலையிட்டு தேர்வு மையங்களை மாற்றி யமைக்க வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.