" நான் உயிர் பிழைச்சதே பெரிய காரியம்டா.... எனக்கு இன்னைக்கு சங்கு தான்னு நினைச்சேன் ...... ஆனா எப்படியோ தப்பிச்சுட்டேன்" />

tamilnadu epaper

தறுதலைக் காதல்

தறுதலைக் காதல்

என்னடா மாப்ள நொண்டி நொண்டி நடந்து வர்ற..."

 

" நான் உயிர் பிழைச்சதே பெரிய காரியம்டா.... எனக்கு இன்னைக்கு சங்கு தான்னு நினைச்சேன் ...... ஆனா எப்படியோ தப்பிச்சுட்டேன் "

 

" விவரமா சொல்லுடா.."

 

" நான் அந்த காலேஜில படிக்கிற பொண்ணை ஒருதலையா காதலிக்கிறேன்னு உனக்கு தெரியுமில்ல... "

 

" அதான் நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் தெரியுமே மேல சொல்லு ...! "

 

" அந்தப் பொண்ணு கடைசி வரைக்கும் முகம் கொடுத்து பேசினதே கிடையாது. முந்தா நாள் வழக்கம்போல அவ போற பஸ்ல நானும் ஏறி அவ ஊர் வரைக்கும் போனேன்."

 

" அப்புறம் என்ன ஆச்சு ? "

 

" தைரியமா நான் எழுதி வச்சிருந்த லவ் லெட்டரை அவளோட லஞ்ச் பேக் உள்ள போட்டுட்டேன். அதில் என்னோட போன் நம்பரையும் குறிச்சி இருந்தேன். "

 

" இன்னைக்கு காலைல அவளே எனக்கு போன் பண்ணுனா. அவளும் என்னை விரும்புகிறதா சொன்னா. எனக்கு தலைகால் புரியல. ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலேஜ் லீவு என்றும், மாலை நாலு மணி பஸ்ஸில் அவள் ஊருக்கு என்னை வரச் சொல்லியும் சொன்னா "

 

" பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து என்னை அழைச்சிகிட்டு போனா.

வழியில இருந்த மாந்தோப்புல உக்காந்து நிறைய பேசணும்னு சொன்னா. நாங்கள் மாந்தோப்பு உள்ளே போனதும் ஏழு எட்டு ஆட்கள் தடியுடன் 

மரத்திலிருந்து குதித்தனர்.

அப்புறம் என்ன எனக்கு சரியான பெரேடுதான். "

 

" ராத்திரி பூரா அடிபட்ட நிலையில் மாந்தோப்பிலேயே கிடந்தேன். காலையில கொஞ்சம் தெம்பு வந்த உடனே எழுந்து நொண்டி நொண்டி பஸ் புடிச்சு ஊருக்கு வந்திருக்கிறேன் "

 

" மாப்ள .... உன் காதல் ஒருதலை காதல் இல்லை. தறுதலை காதல்டா "

************************

 

வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்