அடுத்த நொடியில் அவனியில் நடப்பது
படைத்தவன் தானே பாரினில் அறிவான் !!
நிலத்தின் நடுக்கம் நிம்மதி குலைக்கும்
நிலையிலா வாழ்வையே நாளும் உரைக்கும் !!
மியன்மார் நாட்டில் முட்டிய நிலங்கள்
தயவின்றி கொன்று தள்ளி விட்டதே !!
அண்டை நாட்டிலும் அதனது எதிரொலி
கண்டவர் மனங்களை கலங்க வைத்ததே !!
நடுக்க அதிர்ச்சி நடுநிசி தொடர்ந்தது
படுத்தும் தூக்கம் பாடாய்ப் படுத்தின !!
மீண்டும் நிலத்தில் மோதல் வருமோ ?
மாண்டிட பூமித்தாய் மனமும் கல்லா ?
பூமியே மனிதரைப் பூமிக்குள் புதைக்குமோ ?
சாமிதான் வந்து சாவினைத் தடுக்கணும் !!
அச்சம் அடங்கிட ஆண்டவன் அருளணும்
நிச்சயம் நிலங்களுக்குள் சண்டை நிற்கணும் !!
-சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி