"கொலை கொலையா முந்திரிக்கா, -- இது சுற்றி வருபவர்.


"நரியே நரியே சுத்தி வா", -- இது அமர்ந்திருப்பவர்கள்.


"கொள்ளை அடிச்சவன்

எங்கிருக்கான்"? -- இது சுற்றி வருபவர்.


"கூட்டத்தில்" />

tamilnadu epaper

தினம் ஒரு விளையாட்டு

தினம் ஒரு விளையாட்டு


"கொலை கொலையா முந்திரிக்கா"


"கொலை கொலையா முந்திரிக்கா, -- இது சுற்றி வருபவர்.


"நரியே நரியே சுத்தி வா", -- இது அமர்ந்திருப்பவர்கள்.


"கொள்ளை அடிச்சவன்

எங்கிருக்கான்"? -- இது சுற்றி வருபவர்.


"கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி". -- இது அமர்ந்து இருப்பவர்கள்.


இப்படியாக சத்தமாக சொல்லிக்கொண்டே ஒருவர் கையில் ஒரு துண்டு துணியுடன் சுற்றி வருவார்.


வட்ட வடிவில் ஏனைய குழந்தைகள் குறைந்தது பத்து பதினைந்து பேர் அமர்ந்திருப்பார்கள்.


கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி என்றதும் சுற்றி வருபவர் யார் முதுகுப் பக்கத்திலாவது அந்த துணியை போட்டு விட்டு சுற்றி வந்து அவர் இடத்தில் அமரவேண்டும்.


மற்றொருவர் துணி முதுகுக்குப் பின்னால் விழுந்ததும் அதனை கையில் எடுத்துக் கொண்டு சுற்றி வந்து தன் இருக்கையில் மீண்டும் அமரவேண்டும். இருவரில் ஒருவர் தான் அமர்ந்து வெற்றி பெறுவர்.


மற்றொருவர் மேற்கூறிய வசனங்களை கூறிக்கொண்டு சுற்றி வரவேண்டும்.


நீண்ட நேரமாகும் இதில் வெற்றி பெறுவது. யார் கடைசியாக அதுவும் ஒருமுறை கூட சுற்றி வந்து திருடனை தேடாதவர் வெற்றி பெற்றவராக ஆவார்.


இந்த விளையாட்டில் கண்ணும் கருத்தும் ஒரு முகப்படுத்தி விளையாடுவது சிறப்பு.


மேலும் உற்சாகத்திற்கும் குறைவிருக்காது.


குழந்தைகள் கூட்டாக விளையாடுவதால் தனிமை விரட்டியடிக்கப்படும் .


மறந்து போன விளையாட்டுக்களை புதுப்பிக்கலாமே?


-வி.பிரபாவதி.