வருடத்தில் ஒரு நாளாம்
எல்லோர்க்கும் திருநாளாம்
எதிர்ப்பார்ப்பு பல நாளாம்
ஒரு நாளில் முடிந்திடுமாம்
எல்லோர்க்கும் என்றாலும்
சிறுவர்க்கோ இரட்டிப்பாம்
புத்தாடை மகிழ்வுடனே - சேரும்
சரவெடியும் மத்தாப்பும்
புதிதாய் மணம் கண்டோர்
கொண்டாடும்
முதல் பண்டிகை -பெரும் பண்டிகை
"தலை தீபாவளி"
எத்தனையோ வந்தாலும்
தலைவனுக்கோ - இல்லை
தலைவிக்கோ
மறந்திடுமா அத் "தலை தீபாவளி"
கொண்டு வருவதில் தந்தையின் பங்கு
வந்ததை தருவதில் தாயின் பங்கு
மகன் மகள் என்றும் மருமக்களென்றும்
இருப்பதை கொடுத்து இன்பம் காண்பர்
தலைமுறை மாற்றங்களுடன்
பேரன் பேத்தியை கண்டோர்க்கு
உடன் கொண்டாடும் தீபாவளி
"தலை' க்கும் (தீபாவளி) பெரிதன்றோ
ஊரெங்கும் வந்திடும் மாற்றங்கள்
"தீபாவளி"க்கும் வந்திடுதே
எண்ணெய் குளியலில்லை
ஷாம்பூ குளியல்தான்
பட்டென்று பெரிதாயில்லை
பகட்டாய் போனதேயெல்லாம்
புதிதாய்த்தான் முளைக்குதே
புதுபட்டாய் ஜொலிக்குதே
வருமுன்னரே நாள் பல யோசித்து
இருநாள் முன்னரே ஓரிரு நாளில்
முடித்து ஒளித்து வைக்கும் இனிப்பெல்லாம்
ஆன்லைன் ஆர்டராய் அலங்கரிக்குதே
பட்டாசு பார்த்து பார்த்து
ரகம் ரகமாய் வாங்கி வைத்து
ரசித்து ரசித்து வெடித்ததெல்லாம்
பழங்கதையாய் ஆனதடி
வெடி வெடிக்க ஆணையடி
ஆனை வெடிக்கும் தனி ஆணையடி
நேரம் பார்த்து வெடிக்க வேண்டும்
மணி அடித்தால் நிறுத்த வேண்டும்
ஆர்ப்பாட்டம் அத்தனையும்
ஒரு நாள் தான் அந்நாள்தான்
ஆட்டம் முடிந்துவிட்டால்
வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்கள்
ஓம் குமார் P N
தெற்கு வாசல், மதுரை 625001