tamilnadu epaper

தீர்வு காணலாம்

தீர்வு காணலாம்

சுத்திகரிக்கவும் புதுப்பிக்கவும்
செப்பனிடவும் பதனிடவும் -
மீந்திருப்பது வேறொன்றும் இல்லை
உள்ளத்தைத்  தவிர … 

ஈசலாய் வெளியி்ல் இளையும்
அதைப்பிடித்து 
உள்ளமர்த்தி ஊடுறுவிப் பார்த்து
அமைதியூட்ட
உகந்ததிந்தக் காலைப் பொழுது 

அமைதியில் ஊன்றிய உள்ளம்
அதிராமல் உதிராமல்
அனைத்தையும் ஆயவும்
தீர்வு காணவும்  வல்லது 

~~~~~~~~
கவிஞர் ம.திருவள்ளுவர் 
திருச்சி