நீ ஏன் கவிதை எழுதுகிறாய்?
கொல்லன் பட்டறையில் ..
ஈங்கு,ஈக்கு என்ன வேலை?
இங்கொரு தேன் சுவை பலாச்சுளை
அங்கொரு குடுவையில் தேன் சொட்டும் மது
என்னை ஈர்த்து வா வென்று அழைக்க;
வெறுமனே சுற்றி வந்தால் விரட்டும் உலகம்
கவிதை புனையும்
பாவனையில் சுற்றிச்சுற்றி
வர அட்டி ஏதும் இல்லை
சுற்றிவரும் எனக்கும்
கிடைக்கிறது, அவ்வப்போது;
கை தட்டும் பாராட்டும்
-சசிகலா விஸ்வநாதன்