tamilnadu epaper

பட்டாம்பூச்சிகளின் பிரபஞ்சம்

பட்டாம்பூச்சிகளின் பிரபஞ்சம்


கூட்டுப் புழுவாய் இருந்தேன் வெறுத்தார்கள்


வளர ஆரம்பித்தேன்

சிறகுகள் முளைத்தது


வானில் வட்டமிட்டேன்

வியந்து பார்த்தார்கள்


அருவெறுப்பில் ஒதுக்கியவர்கள்

அழகானதும் விரும்பினார்கள்


வண்ணங்களில் சிறகுகளாக

எண்ணத்தில் நிறைந்தேன்


எட்டியே பிடித்தார்கள்

கரங்களில் தவழ்ந்தேன்


இறுக பற்றினால் துவள்வேன்

இரசித்தால் மகிழ்வேன்


மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சினேன்


அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவினேன்


மொட்டும் மலர்ந்து 

வண்ண மலர்களானதே


பூத்துக் குலுங்கி 

மனதை அள்ளுதே


*பட்டாம்பூச்சிகளின் பிரபஞ்சம்*


அழகானது நன்மை செய்திடுவோம்


அன்பை பகிர்ந்து பண்பால் உயர்ந்திடுவோம்


வண்ணங்களை வர்ணமாக்கி 

வாழ வைத்திடுவோமே



-பெ.வெங்கட லட்சுமி காந்தன் விருதுநகர்