"என்ன பண்றது ஒரே பையன்னு அப்பா அம்மா வெளி உலக" />
"ரவி எதற்கு பயப்படனும் எதற்கு பயப்படக்கூடாதுன்னு ஒரு தெளிவு வேண்டும்"
"என்ன பண்றது ஒரே பையன்னு அப்பா அம்மா வெளி உலக அனுபவம் தெரியாம வீட்டுக்குள்ளே வளர்த்துட்டாங்க இப்ப வெளியில எதையுமே எதிர் கொள்ள முடியில" எனத் தன் நண்பன் முனுசாமியை பார்த்து சொன்னான்
"தைரியம் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் உலகை எதிர் கொள்ளும் வல்லமை வேண்டும் வீடெனும் கூட்டை விட்டு வெளியே வா" என்றான்
"உன் வார்த்தை எனக்கு உயிர்ப்பாக இருக்கிறது"
"பயம் பாதுகாப்பை தருமென நினைப்பது கோழைத்தனம் இந்த பயந்தான் நாம் அடைய வேண்டிய லட்சிய பாதையின் தடை கல் அவற்றை எடுத்து போட்டு பயணிக்க வேண்டும்"
"முடியில உலகை எதிர்கொள்ள அனுபவம் இல்லை செய்கின்ற காரியங்களில் முன் அன்பவம் இல்லாததால் தவறிவிடுவோமோ என்கிற பயம் மனதை ஆட்கொள்கிறது"
"இங்கு பயந்தால் எதுவும் செய்ய இயலாது வெற்றி பெற குத்து சண்டையில் முட்டி மோதிதான் ஆகவேண்டும் தோல்வியை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தோல்வி நிரந்தரமல்ல "
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒரு சிறுவன் ஓடுவதையும் பின்னே நாய் துரத்துவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அந்த சிறுவனுக்கு ஓட முடியவில்லை மூச்செடுத்தது வேறு வழியில்லை இனி பயந்தால் ஆகாது ஓடவும் முடியாது என முடிவெடுத்து அந்த சிறுவன் அந்த குட்டி நாயை திரும்பிப் பார்த்து ஒரு கல்லை எடுத்து ஓங்கி "ஓய்" என்றான்
இதுவரை அவனை துரத்தி வந்த நாய் அவனின் அதட்டல் சத்தத்திற்கு பயந்து வந்த வழியே பயந்து வேகமாய் திரும்பி ஓட ஆரம்பித்தது
முனுசாமி சொன்னான் "ரவி அந்த காட்சியை பார்த்தாயா பயந்தால் நம்மை துரத்துவார்கள் வாழ விட மாட்டார்கள் எதிர்த்து நிற்க வேண்டும் தேவையற்ற பயங்களை அகற்ற வேண்டும்" என்றான்
அந்த சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்த ரவிக்குள் பயம் எனும் மேகங்கள் அகன்று கொண்டிருந்தது
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி