tamilnadu epaper

பல்லாங்குழி

பல்லாங்குழி


மடிக்கப்பட்ட பலகை கட்டையின் உட்புறம் இரண்டு பக்கமும் ஏழு ஏழு குழிகள் இருக்கும். ஐந்து முதல் பத்து வரை எண்ணிக்கையில் சோழிகள், புளியங்கொட்டைகள், சிறு கற்கள் குழிகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு குழியில் இருப்பதையும் அடுத்தடுத்த குழிகளுக்கு ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவேண்டும். ஒரு கட்டத்தில் முடிந்தவுடன் ஒரு காலி குழியின் அடுத்த குழியில் நிரம்பியுள்ள சோழிகள் நமக்கானதாக எடுத்துக் கொள்ளலாம். 


இரண்டு குழி காலியாக இருந்தால் ஒன்றும் கிடைக்காது. காலியான குழிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் நிரப்பப்படும் போது அவரவர் பக்கம் சேரும் மும்மூன்று சோழிகளும் பசு என்று சொல்லி எடுத்துக் கொள்ளப்படும்.


மீண்டும் மீண்டும் ஆடும்போது யாரோ ஒருவரிடம் ஒரு குழியில் நிரப்புவதற்கு கூட சோழிகள் இல்லாதபோது தோற்றதாக கருதப்படும்.


கைகளுக்கும் விரல்களுக்கும் நல்ல ஒரு ஆரோக்கிய பயிற்சியாக இருக்கும். கண்களுக்கும் மூளைக்கும் கூட சுறுசுறுப்பைத் தரும்.


தேவநேயப் பாவாணர் கூட பல்லாங்குழி விளையாட்டை தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என்று முதன்முதலாக எழுதியுள்ளார்.


தமிழக பண்பாட்டு வரிசையில் இந்தப் பல்லாங்குழி பெண்களுக்கு சீதனமாக கொடுத்து அனுப்பப்படுகிறது.


இதில் ஏழு சோழிகள் வைத்து நான்கு மூலைகளிலும் இருப்பதை எடுக்காமல் நிரப்பி வருவார்கள். காலி குழி வந்து அதனை எடுக்கும்போது அதிக எண்ணிக்கையில் சோழிகள் கிடைக்கும். அந்த மூலைக் குழியோடு முடிந்தால் எதிரே இருப்பவருக்கும் பாதி பங்கு உண்டு. இதனை 'காசி' 'கூட்டுக்காசி' என்றெல்லாம் சொல்லுவார்கள்.


ஆரம்பம் முதல் கடைசி வரை வெற்றி தோல்வி மாறி மாறி வந்து ஒரு கட்டத்தில் ஒருவர் 'போன்டி' ஆகிவிடுவார்கள். சுவாரசியமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.


அநேகமாக எல்லோர் வீடுகளிலும் இருக்கும்.  

மீன் வடிவில், செவ்வக வடிவில், சதுர வடிவில் என பல விதமாய் இருக்கும். நீங்களும் வாங்கி விளையாடிப் பாருங்கள். மிகவும் பிடிக்கும்.


-வி.பிரபாவதி