tamilnadu epaper

பழி தீர்ந்தது..

பழி தீர்ந்தது..

அதிகாலை 4 மணி. சென்னை நகரத்தில் மழை கொட்டியபடி இருந்தது. 

வெறிச்சோடி இருந்த ஒரு தெருவில், அஜய் ஓரமாக காரை நிறுத்தினான். 

அவன் காரின் சைலன்ஸரை அழுத்தி, வெளியில் யாரும் கவனிக்காதபடி அடர்ந்த நிழலில் இருந்து கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

'இந்த கும்பல் இங்க தான் இருக்கும்'. எச்சரிக்கையா நடக்கணும்..."

அவனுக்கு முன்னதாக கிடைத்த தகவல் மெய்ப்படட்டது. 

இந்த வேலை முக்கியமானதாகவும் பெரியதாகவும் இருந்தது.

 பணம் வேண்டுமென்றால், இதை வெற்றிகரமாகச் செய்ய வேண்டிய நிர்பந்தம் அஜய்யின் மனதில் ஆழமாகப் ஊடுருவி இருந்த நேரம்.

திடீரென, கட்டிடத்தின் மூலையில் ஒரு கருப்பு மேனி தெரிந்தது.

 அந்த நபர் சிகரெட்டை முழுதும் இழுத்து  வெண்புகையை வெளியே  மேகமாக உமிழ்ந்தான்..


சிகரெட்டை அணைக்காமலேயே தூர வீசினான். 

 காரின் லைட்டை ஆன் செய்து அணைத்தான், ஆம் அது டேவிட் முகம்தான்,

 உலகப் புகழ்பெற்ற திருட்டு மற்றும் கொலைகும்பலின் தலைவன்.

இவன் காரிலிருந்து இறங்கவும்,

 "அஜய், நீ சரியாகவே  வேலையை முடிப்பாய் என்பது தெரியும்."

 "முதலில் பணம்,
 டேவிட்.

 அதுக்குப் பிறகுதான் வேலையைக் குறித்து பேசுவோம்."

டேவிட் சிரித்துக் கொண்டே, பையில் இருந்து ஒரு பர்சை எடுத்தான். அதை அஜய்க்கு கொடுத்தான்.

 அஜய் பணத்தை கண்ணால் கணக்குப்பார்த்தான்.

"சரி, இது போதும். வேலையை செய்து முடிப்பேன்.

அஜய் அமைதியாக அவனை நோக்கிப் பார்த்தான்.
 பனிக்குளிரும் மழையும் இருவரையும் சூழ்ந்தது.

 அதேசமயம், அஜய் தன் கையால் ஜாக்கெட்டின் உள்ளே சென்று ஒரு துப்பாக்கியை எடுத்தான்.

"நீ என்ன செஞ்சாலும் நான்தான் இந்த கும்பலின் தலைவன் என்றான் டேவிட். 


அது இன்றோடு கடைசி..


என்ன சொல்கிறாய்?"
என் சகோதரனை கொன்றது நீ என அஜய் உள்மனது  கூறவும், இன்றைய இரவில் நீயும் செத்துவிட போகிறாய்." என சத்தமாக  அலறல்..

திடீரென டேவிட் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தான்.

 அஜய், தவறாமல், துப்பாக்கியை எடுத்து அவன் மீது சுட்டான்.

மழையிலும் குண்டின் சத்தம்  அதிர்ந்தது.