tamilnadu epaper

பாடசாலை

பாடசாலை

 

    மதி விளக்கு சுடர்

    விட அகம் பிரகாசிக்க

    முகம் ஜொலிக்க......

 

      எதிர்கால தேடலை

      நெருங்கும் 

      தொடர் பயணம்...."

 

      கற்கும் முறையை

      அறிந்திட மனமும்

      செயலும் ஒன்றிட ....."

 

      தூய்மை அதுவே

      குடிகொண்டிட 

      அறியாமையை நீக்கிட..."

 

     ஆக்கம் அமைதி

     பெருகிட உணர்வு

     உடல் உள்ளம்

     ஒன்று கலந்திட ....."

 

     வீட்டை உறவை

     தள்ளி வைத்து

     பாசம் அன்பு

      ஈர்ப்பிற்கு ....."

 

      இடம் தராமல்

      கல்வியை மட்டும்

      சுவாசிக்கும்

      போதிமரம் ....."

 

    வற்றாத 

    ஊற்று மனதை

    பன்படுத்தும் கூடம்...."

 

      அறம் கற்கும்

      நூலகம் அறிவை

      தேடும் விஞ்ஞானம்

      பதிலை தரும்

      மெய்ஞானம் ....."

 

     புலமையை வெளிக்காட்ட

     திறவுகோல் 

     விழிகளை உணரச்

     செய்யும் மந்திரக்கோல்...."

 

    பாடசாலை அதுவே

    அறிவிற்கு விருந்து

    தரும் கலைக்கூடம் .."

 

- சீர்காழி .ஆர் .சீதாராமன்.

    9842371679 .