" வீணா யாரையோ காதலிக்கிறாளாமுங்க "
மகள் வேலைக்கு புறப்பட்ட உடனே இந்த செய்தியை கணவரிடம்
" அவளேதான் சொன்னாள்.
இதை அவளே உங்க கிட்ட சொல்ல சொன்னாள் "தெரிவித்தாள் மங்களம்.
" அப்படியா ... உனக்கு யார் சொன்னது ? "
" சரி சரி... இன்னைக்கு ராத்திரி அவளிடம் விசாரிப்போம் " என்று குழப்பத்துடன் கூறி விட்டு வேலைக்கு புறப்பட்டார்.
இரவு சாப்பாட்டின் போது
வீணாவே ஆரம்பித்தாள்.
" அம்மா காலைல சொன்னாங்களாப்பா ? "
" சொன்னா.... என்னாம்மா இப்படி செஞ்சிட்ட ? "
" இது நானே எதிர்பாராதது அப்பா. என்கூட வேலை பார்ப்பவர்தான். மூணு மாசத்துக்கு முன்னால அவர் ப்ரொபோஸ் பண்ணினார்.
விசாரித்து பார்த்துட்டு நான் நேத்துதான் ஓகே சொன்னேன் "
" என்னடா பெத்த அப்பா கிட்டயே மகள் தன்னோட காதலை சொல்றாளேன்னு ஆச்சரியமா இருக்கா ? "
நீங்களும் எத்தனையோ புரோக்கர் மூலமா எனக்கு வரன் பாக்குறீங்க. எதுவும் செட் ஆகல. உங்களுக்கு சிரமத்தை குறைக்கிறதுக்காக நான் எடுத்த முடிவு இது.
தன் மகள் எந்த முடிவை எடுத்தாலும் அது நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
சின்ன வயதில் இருந்தே அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் புத்திசாலித்தனமாகவே இருக்கும்.
" இதோ மாப்பிள்ளை பற்றிய எல்லா விவரங்களும் இதில் இருக்கிறது " என்று ஒரு ஃபைலை காட்டினாள்.
அதில் மாப்பிள்ளையின் புகைப்படம் முதல் அவருடைய கல்வி தகுதி, வேலை, சம்பளம், குடும்ப பின்னணி போன்ற அனைத்தும் இருந்தன.
புகைப்படத்தைப் பார்த்ததுமே அவருக்கு பிடித்து விட்டது.
" இருந்தாலும் அவருடைய நடத்தை பழக்க வழக்கம் பற்றி தெரியுமாம்மா ? "
" இதோ அவரைப் பற்றிய டிடெக்டிவ் ரிப்போர்ட் . தனியார் துப்பறியும் நிறுவனத்தில் இருந்து வாங்கியது. அவருக்கு போதை பழக்கமோ வேறு எந்த கெட்ட பழக்கமோ இல்லை " என்றபடி சீலிடப்பட்ட ஒரு கவரை தந்தையின் கையில் கொடுத்தாள்.
அதைப் படித்துப் பார்த்தவர் வீட்டில் மாட்டி இருந்த காலண்டரை எடுத்து ஏதோ பார்க்க ஆரம்பித்தார்.
" காலண்டர்ல என்னப்பா பாக்கறீங்க ? "
" வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு. அன்றைக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க போகலாம்மா.
நானே பார்த்தாலும் இவ்வளவு அருமையான வரனை பார்க்க வாய்ப்பே இல்லை. என் வேலையை சுலபமாக்கி விட்டாய் ! " என்றார்.
------------------------
வெ. ஆசைத்தம்பி
68, மேல தெரு
விளார்
தஞ்சாவூர் - 613006.