..
எல்லா சிவன் கோயில்களிலும் காலபைரவர் சன்னதிக்கு அருகில் நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.அருகில் ஒரு கிணறும் கண்டிப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.
நவகிரகங்கள் ஒன்பது பேரும் காலதேவன் என்று அழைக்கப்படும் காலபைரவ பெருமானுக்கு கட்டுப்பட்டவர் என்பதை நமக்கு உணர வைப்பதற்காக இவ்வாறு சிவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாலயத்தில் நவக்ரக சன்னதியை 12 முறை வலம் வருவதன் மூலமாக அன்றைய தினத்தில் நாம் செய்த கர்மவினைகளை நவக்கிரக அதிபதிகள் ஏற்றுக்கொண்டு நம்மை புண்ணிய ஆத்மாவாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
நவக்கிரகத்தை 12 முறை வலம் வந்த பிறகு கண்டிப்பாக கால பைரவ பெருமானை வழிபட வேண்டும்.
முதல் சுற்று சுற்றும்போது சூரிய பகவானின் பிராண தேவதையான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
இரண்டாம் சுற்று சுற்றும் போது சந்திர பகவானின் பிராண தேவதையான கபால பைரவா பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
மூன்றாம் சுற்று சுற்றும் போது குருபகவானின் பிராண தேவதையான அசிதாங்க பைரவ பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
நான்காவது சுற்று சுற்றும் போது ராகு பகவானின் பிராண தேவதையான சம்ஹார பைரவ பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
ஐந்தாவது சுற்று சுற்றும் போது புதன் பகவானின் பிராண தேவதையான உன்மத்த பைரவர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
ஆறாவது சுற்று சுற்றும்போது சுக்கிர பகவானின் பிராண தேவதையான ருரு பைரவ பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
7வது சுற்று சுற்றும் போது கேது பகவானின் பிராண தேவதையான பீஷண பைரவ பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
எட்டாவது சுற்று சுற்றும் போது சனிபகவானின் பிராண தேவதையான குரோதன பைரவர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
9வது சுற்று சுற்றும் போது செவ்வாய் பகவானின் பிராண தேவதையான சண்டபைரவர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.
10வது சுற்று சுற்றும் போது இந்த ஆலயத்தை கட்டுவதற்கு காரணமாக இருந்த அனைத்து சிவனடியார்களுக்கும் நன்றி நன்றி நன்றி என்று ஜெபிக்க வேண்டும்.
11வது சுற்று சுற்றும்போது இன்று வரையிலும் இந்த ஆலயத்தையும் ஆலயத்திற்கு சொந்தமான சொத்துகளையும் பாதுகாப்பதற்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து சிவ பக்தர்களுக்கு நன்றி நன்றி என்று ஜெபித்தவாறு வலம் வர வேண்டும்.
12 சுற்று சுற்றும் போது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று இந்த ஆலயத்திற்கு வந்து இந்த நவக்கிரக நாயகர்களை வழிபடும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது இந்த கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு நன்றி என்று நினைத்தவாறு நவக்கிரக நாயகர்களை வலம் வரவேண்டும்.
அதன் பிறகு அருகில் உள்ள கால பைரவர் பெருமானை "ஓம் ஹ்ரீம் பம் மஹா பைரவாய நமஹ "என்று நினைத்தவாறு கையெடுத்துக் கும்பிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.