கலங்கிய
மனதை
கண்டுகொள்ளாமல்
கவலையுறும்
மனிதர்களை
ஆறுதல் படுத்தாமல்
தனிமையே
துணையாய்
அலைகிறோம்
ஆற்று
வெள்ளங்களை
ரசிக்கிறோம்
உள்ளங்களில்
இருட்டை
வைத்து கொண்டு
பாதையில்
முட்களை
போட்டு விட்டு
நாம்
தள்ளியே
நடக்கிறோம்
ஒவ்வொரு
நொடிப்பொழுதும்
இறப்புகள்
இருப்பிடம்
இல்லாத
பிறப்புகள்
வழிமுழுக்க
ஏக்கங்கள்
துயர் துடைக்காத
கரங்கள்
எச்சில்
விழுங்கியே
தாகம் தீர்க்கிறோம்
தீர்த்துக்கட்டவே
தீரத்தை..... வெளிப்படுத்துகிறார்கள்
மனித வாழ்வில்
மனிதம் தொலைத்த
மனிதர்களாக அல்ல
அலங்கார
பொம்மைகளாகவே
தெரிகிறார்கள்
-வின்சென்ட் செண்பகராசு
சேலம்