சின்ன சின்ன பொம்மை
சீரான பொம்மை
அத்தை வாங்கித்தந்த
அழகான பொம்மை
மஞ்சள் கவுனும் போட்டு
மயங்க வைக்கும் பொம்மை
கையில் எடுத்து பார்த்தால்
கண்ணை சிமிட்டும் பொம்மை
தஞ்சாவூரு பொம்மை
தலைய தலைய ஆட்டி
தைய தைய என்று
தாளம் போடும் பொம்மை
தம்பிக்கென்று ஒன்று தங்கைக்கென்று ஒன்று
இரண்டு பொம்மை தன்னை
வாங்கி வந்தார் அப்பா
செக்கச் சிவந்த நிறத்தில்
சொக்க வைக்கும் பொம்மை
நம்ப நாட்டு பொம்மை
ரொம்ப நல்ல பொம்மை
கையிலெடுத்து வைத்து
கன்னம் தன்னை சீண்டி
கொஞ்சி கொஞ்சி ஆட வாங்க கொஞ்சம் நீங்க
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்