தீபங்களின் வரிசை தீபஒளி -நல்
எண்ணங்களின் வரிசை நல்வழி...
ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி -நம்
ஆசைக்கு வழிகாட்டும் பேரொளி...
பூத்திடும் ஒளிர்ந்திடும் உணர்வுகள் -பல
பூக்களின் வண்ணங்கள் புத்தாடைகள்...
நாவினில் கரையட்டும் இனிப்புகள் -உன்
பேச்சினில் நிலவட்டும் இனிமைகள்...
பூமிக்கும் நிலவுக்கும் ராக்கெட்டுகள் -விஞ்
ஞானிகள் போல்மாறும் சிறுவர்கள்...
வானவெடிகள் வெடிக்கும் பிரவாகம் -மேல்
வானத்தில் இருள்நீக்கும் பிரகாசம்....
வேடிக்கை வெடிகள் சிதறட்டும் -நம்
துன்பங்கள் மடிந்து வீழட்டும்...
தீ்ங்கற்ற வாழ்வினில் முன்னேற்றம் -பல
தீபங்கள் வழிகாட்டும் என்றென்றும்...
தீபங்களின் வரிசை தீபஒளி -நல்
எண்ணங்களில் மகிழ்ச்சி தீபாவளி...!
-துரை சேகர்
கோவை.