tamilnadu epaper

மணல் வீடு

மணல் வீடு

 

   " ராஜா எட்டாம் வகுப்பு கான்வென்ட்டில் படிக்கிறான் பணக்கார வீட்டுப் பையன்.

 

      மணி எட்டாம் வகுப்பு அரசாங்க பள்ளியில் படிக்கிறான் . நடை பாதை இடத்தில் வீடு மிகவும் ஏழையானவன் மணி .

 

       ஆனால் இருவரும் மாலையில் அருகில் இருக்கும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள் . தினமும் கடற்கரை மணலில் விளையாட்டு , பிறகு மணல் வீடு மணி கட்டுவான் அந்த அழகை கண் கொட்டாமல் பார்த்து ரசிப்பான் ராஜா . 

 

          தினமும் புதிது புதிதாக மிக அழகாக வித்யாசமாக மணல் வீடு கட்டி அழகு படுத்தி காட்டுவான் மணி . ரசித்த வண்ணமாக இருப்பான் ராஜா .

 

         தினமும் அழகாக மணல் வீடு அசராமல் நம்பிக்கையோடு கட்டறியே அதனால உனக்கு என்ன பலன் என்று கேட்டான் ராஜா. 

 

        " அதற்கு மணி நாங்கள் எல்லாம் நடை பாதை வாசிகள் தனி வீடு என்று எங்களுக்கு கிடையாது . ஆனால் எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு இடம் வாங்கி குடிசை வீடாவது அதில் கட்டுவேன் . அதற்கு என் மணல் வீடு தான் அஸ்திவாரம் ,அச்சாரம் , எதிர்கால தேடலின் வழிகாட்டி என்றான் உற்சாகமாக மணி .

 

      நண்பன் மணியின் கனவு பலிக்க மனம் களிக்க ஆசி கூறி பிரார்த்தனை செய்தான் ராஜா.

 

       மணியின் தன்நம்பிக்கை வைராக்கியம் கண்டு வியந்த ராஜா அவனின் நட்பு நேரத்தை அதிகரித்து மகிழ்ந்தான் .

 

          ஏழையின் தேடல் எழுச்சியானது பயிற்சி முயற்சி கொண்டது ஒரு நாள் அது வெற்றி பெறும் என்கிற ஆணித்தனமான உண்மையை புரிந்து கொண்டான் ராஜா .

 

                     மேலும் பணக்காரன் தேடல் வீழ்ச்சியானது, பணம் மட்டும் தான் அவன் இலக்கு மகிழ்ச்சி என்பது கானல் நீரே என்பது புரிந்தவனாய் வீட்டை நோக்கி சிந்தித்துக் கொண்டே சென்றான் ராஜா .

 

   - சீர்காழி .ஆர். சீதாராமன்.

       9842371679 .