சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் சார்பில் உலக அன்னையர் தின விழா டவுண் மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிவப்பிரகாசர் நற்பணி மன்றச் செயலாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
வந்திருந்தவர்களை சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் கவிஞர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கலை பதிப்பக ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் கவிஞர் புன்னைச்செழியன், நிழல் இலக்கிய தள பொறுப்பாளர் கவிஞர்.செ.ச.பிரபு, ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் நிதிஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன வளர்ச்சி குன்றிய அன்னையர்களுக்கு சிங்கப்பூர் தமிழ்மாமணி திலகராணி வழங்கிய மதிய உணவு முதியோர்களுக்கு வழங்கப்பட்டது.
உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
நிறைவாக இல்ல பொறுப்பாளர் நன்றி கூறினார்