திருவாரூர் அருகில் சாலை ஓரத்தில் ஓட்டல் நடத்தி வந்தார் ராமன்.
ஒரளவுக்கு நல்ல வருமானம் அதை வைத்து தன் இரண்டு பெண்களையும் படிக்க வைத்து தன் குடும்பத்தையும் நடத்தி வந்தார் .
தினமும் இரு ஏழைக்கு இலவச உணவு அளிப்பது அவருக்கு வழக்கம் .
அந்த ஓட்டல் மீது அத்தனை பிரியம் அன்பு ஈர்ப்பு தன் உயிரில் பாதி என்று எண்ணினார் ராமன்.
தன் பெண்கள் திருமண வயதை எட்டியதும் வேறு வழி தெரியாமல் தன் ஓட்டலை தன் நண்பன் ராஜாவிடம் விற்று விட்டு அதில் கிடைத்த ஐம்பது லட்சத்தை வைத்து இரு பெண்களின் திருமணத்தை நல்ல படியாக நடத்தி முடித்தார் .
திருமணம் முடிந்த பிறகு வீட்டில் இருக்கும் போது ஒரு வருடம் ஆன பிறகு ஓட்டல் ஞாபகம் வந்தது ராமனுக்கு .
ஒரு நாள் மெல்ல தன் ஓட்டலுக்கு சென்றார் . ராஜா வரவேற்று உள்ளே அழைத்து சென்று உபசரித்தார் .
வேலைக்கு வருகிறேன் என்றார் ராமன், அன்போடு அழைத்தார் ராஜா . சில காலம் ஓடியது ராமன் மனம் தன் ஓட்டலில் மெல்ல மெல்ல தேறி நின்றது .
ராஜாவின் மகன் மகள் திருமண ஏற்பாடாக ராஜா ராமனை அழைத்து கல்லாவில் அமர வைத்தார் .
மீண்டும் ஓட்டல் அதிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தார் ராமன் . ராஜா மகனும் மகளும் அமெரிக்காவிற்கு அழைக்க ஓட்டலை பரிசாக ராமனிடம் அளித்து விட்டு சென்றார் .
மீண்டும் முதலாளி பதவி கிடைத்ததும் கடவுளுக்கும் நட்பான ராஜாவிற்கும் நன்றி கூறி தன் ஓட்டல் மண் வாசத்தை மனதார நுகர்ந்தார் ராமன் .
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட ராமனுக்கு இறைவன் கொடுத்தார் மீண்டும் முதலாளி பதவி பரிசு .... "
- சீர்காழி. ஆர். சீதாராமன் .