tamilnadu epaper

முதியோர் இல்லம்!*

முதியோர் இல்லம்!*

அந்த முதியோர் இல்லத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு அதன் நிர்வாகியின் அறைக்குள் நுழைந்தனர் நகுலும் அவனது மனைவி மாளவிகாவும்.

 

  “எங்க அம்மா ஒரு விடோ. அவங்களை உங்க முதியோர் இல்லத்தில் சேர்க்கணும்....” என்ற நகுலை ஏற இறங்கப் பார்த்துவிட்டு-

 

 “நல்லவேளை ஒரு இடம்தான் காலியா இருக்கு. சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க...” என்றார் நிர்வாகி.

 

“முன்வைப்புத் தொகை எவ்வளவு கட்டணும்?"

 

" 10 லட்சம்'

 

 " கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதா?'

 

" ஸாரி சார். இந்த சுற்று வட்டாரத்திலேயே எங்க முதியோர் இல்லம் தான் நம்பர் ஒன்!''- பெருமை அடித்துக்கொண்டார் நிர்வாகி.

 

 "ஓகே. மாதக் கட்டணம் எவ்வளவு?”

 

 “20 ஆயிரம் ரூபாய். மாசாமாசம் சரியா ஒண்ணாந்தேதி கட்டிடணும்..."

 

“சரி.அடுத்த வாரம் ஒரு நல்லநாளாப் பார்த்து எங்க அம்மாவை அழைச்சுக்கிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்- 

வேறு ஒரு மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தும் நகுல்!

 

 

*-ரிஷிவந்தியா,*

   *தஞ்சாவூர்.*