சாம்பசிவம், தான் ஓய்வூ தியம் பெறும் வங்கிக்கு சென்று
மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.இப்போதுதான் எந்தவொரு
வங்கியிலும் வாடிக்கையாளர்
கூட்டத்தை காணமுடியவில்லையே!
காரணம், காகிதமில்லா பண பரிவர்த்தனை என்ற பெயரில் கணினி மயமாக்கப்பட்ட இயந்திர ங்கள் மூலமாக பணம் எடுத்தல்,
வங்கிக் கணக்கு புத்தகத்தில்
வரவு, செலவை பதிவுச் செய்து
கொள்ளுதல் என்று அனைத்துமே
வங்கிக்கு வெளியே நிகழ்வதால்
மக்கள் நடமாட்டம் வங்கிக்குள்
குறைந்து விட்டது.
சாம்பசிவமும்,தனது ஓய்வூதிய ப்
பணத்தை தான் குடியிருக்கும் நகரு க்கு அருகே இருக்கும் ஏடிஎம் இயந் திரத்தில் மாதா மாதம் எடுத்துக்
கொள்வார்.ஆனால் வங்கி சேமிப்பு
க்கணக்கு புத்தகத்தில் வரவு செலவு விபரத்தை, பதிவு செய்து
கொள்ள இவர் வசிக்கும் இடத்திலி ருந்து மூன்று கிலோமீட்டர் தொலை விலிருக்கும் வங்கிக்கு நேரடியாக
சென்று வர வேண்டும்.
தனது இருசக்கர வாகனத்தில்
வீட்டிலிருந்து புறப்பட்டவர் சரியாக
பதினைந்து நிமிடங்களில் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு
வந்து விட்டார்.
வங்கிக்குள் நுழைந்தவர் சேமிப்பு க்கணக்குப் பிரிவு பகுதிக்கு சென்
றதும் ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டார். அங்கு வழக்கமாக இருக் கும் எழுத்தர் அந்த இடத்தில் இல்லை.அதற்கு பதிலாக புதிய
எழுத்தர்,அதுவும் இளம்வயதில்
உள்ள பெண் ஒருவர் அமர்ந்திருந் தார்.
கணினியை இயக்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்
எழுத்தர், நிமிர்ந்து ப்பார்த்து சாம்ப சிவத்திடம், சார் என்ன வேண்டும்
என்றாள்.
சாம்பசிவமும், எனது சேமிப்புக் கணக்கு புத்தகத்தில் பதிவு செய்து
தாருங்கள் என்று அந்த பெண்ணி டம் புத்தகத்தை நீட்டினார்.
கணக்குப் புத்தகத்தை வாங்கிய படியே அந்த பெண் எழுத்தர், சார் இப்படி உட்காருங்க என்று தன் அருகே உள்ள நாற்காலியைச் சுட்டிக் காட்டினார்.
சாம்பசிவத்திற்கு ஒன்றும் புரிய வில்லை. இதுவரை வங்கியில்
நம்மை உட்கார வைத்து எந்த பணி யாளரும் பேசியதில்லையே என்ற நினைப்போடு நாற்காலியில் அமர்ந்தார்.
சார்...என் பேரு லட்சுமி.நான்
தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி
இங்க வந்திருக்கன். இங்க வந்து
பதினைந்து நாளாகிறது.எனக்கு
பக்கத்துல மணல்மேடு கிராமம் தான் சார்...என்று தன்னை அறிமு கம் செய்து கொண்டாள்.
சார்... நீங்க எந்த டிபார்ட்மென் ட்ல வேலை பார்த்தீங்க... சொந்த ஊர், குழந்தைகள் பற்றியெல்லாம்
கேட்டாள்.
சாம்பசிவமும் தான் தாசில்தா
ராக பணிபுரிந்து ஒய்வுபெற்றதை
யும், தனது குடும்பத்தைப் பற்றிய
தகவலையும் தெரிவித்தார்.
அந்த பெண் எழுத்தரோ ரொம்ப நாள் பழகியவர் போன்று சாம்பசிவ த்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.
இடையில் தனக்கு வந்த காபியை யும் சாம்பசிவத்துக்கு கொடுத்து
சாப்பிட சொன்னாள்.
சார்....உங்க கணக்கு புத்தகத் தில் இன்றைய தேதிவரை பதிவுச்
செய்திட்டேன்.இனிமேல் மாதம் ஒருமுறை வந்து பதிவு செஞ்சிட்டு போயிடுங்க.....
ரொம்ப நன்றிம்மா... இந்த வங்கியில் நான் இருபது வருசமா வரவு செலவு பண்ணிட்டு வரேன்.
உங்கள மாதிரி என்னை உட்கார வச்சு, அன்பா பேசுனவங்க யாருமே இல்லை.அதனாலதான் இங்கு வர பிடிக்காம மூன்று மாசத்திற்கொரு தடவை வந்து புத்தகத்தைப் பதிவு செஞ்சிட்டு போவன்.... இப்படி
அன்பா பேசி வேலை செய்றவங்க யாரும் எந்த பேங்கிலும் இருக்கற மாதிரி தெரியலம்மா! உன்னுடைய இந்த சர்வீசுக்கு உனக்கு சீக்கிரமே மேனஜர் ப்ரோமோஷன் கிடைக் கும். நீங்க இங்க இருக்கிற வரைக் கும் நான் மாசா மாசம் வந்துட்டு
போறம்மா...என்று எழுத்தர் லெட்சுமியிடம் சொல்லிய படியே
ஒரு மனநிறைவோடு சாம்பசிவம்
வங்கியிலிருந்து வெளியேறினார்.
++++++++++++
ஆக்கம்:
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.