tamilnadu epaper

ரூ.400 கோடி வரி கட்டிய அயோத்தி ராமர் கோவில்

ரூ.400 கோடி வரி கட்டிய  அயோத்தி ராமர் கோவில்


அயோத்தி, மார்ச் 18–

உ.பி. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில், கடந்த ஆண்டு ஜனவரி 24ல் திறக்கப்பட்டது. அதன் பிறகு தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து பால ராமரை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: 

இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலமாக அயோத்தி ராமர் கோவில் உருவாகியுள்ளது. தினமும் இந்தக் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மகா கும்பமேளாவின் போது, தினமும் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டில் மட்டும் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில், ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ரூ.400 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது. 

இதில் ரூ.270 கோடி ஜிஎஸ்டியாகவும், மீதமுள்ள ரூ.130 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது. அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள், சிஏஜி அதிகாரிகளால் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.