வந்தவாசி, மே 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பாக வந்தவாசியில் வேல் பூஜை வழிபாடு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி நடைபெற்ற நிகழ்விற்கு இந்து முன்னணி வேலூர் கோட்டச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அருட்சக்தி ஆறு.லட்சுமணன் சுவாமிகள் தலைமை தாங்கினார். இந்த வைபவத்தில் இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கோ.மகேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் டி.ஆர். பாமாபதி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர்கள் ராஜா, ஆகாஷ், லோகேஷ், கோபி பாரத் வாசன் மற்றும் நகர செயலாளர் ஞான முருகன், கார்த்திக் சத்யா மற்றும் பாரத ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர தலைவர் சுரேஷ், நகரத் துணைத் தலைவர் நாராயணன், நகர செயலாளர் ஆர்.செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.