tamilnadu epaper

வனவாசம் எதற்கு ?

வனவாசம் எதற்கு ?


யாரையாவது எதற்காகவாவது

குறை காணாது இருக்க முடியாதா ?”

என்கிறாள் மனைவி


“இது குறை காண்பதல்ல…

நிறைசெய்வதற்கான முறையான அடித்தளம்”-

என்கிறேன் நான்…


“நிறைதானே செய்ய வேண்டும்

நிறையையே நோக்கலாமே”

- இது அவள்


மேலும் சொல்கிறாள்…

“நிறையைக் காணக் காண

நிறையே நிறையும்”….என்றும் !

“எதைக் கண்டுகொள்கிறோமோ 

அதுவே வளரும்”…என்றும் !!


மனைவியின் ஞானம் என்பதால்

மறுதலித்து விடுவதா என்ன ?


மனையிலேயே போதிமரம் ஒன்று இருப்பதை

உணர்ந்து விட வாய்த்துவிட்டால்

வனவாசம் போகவேண்டி இருக்காது போலும் !


-ம.திருவள்ளுவர்