குழல் சொல்லும் சேதியென்ன நீயும் கேளடா
குமரி உந்தன் சோடியாக நீயும் ஆகுடா
உறங்கும் உன்னை எழுப்ப நானும் பாடவா
உறங்கா மனதை உனக்குத் தூதாய்க் கொள்வதா
உறக்கம் கொள்ளா மனது எனதடா
இரக்கம் கொள்ளா மனது உனதடா
உணர நானும் ஏதும் செய்யவா
உணரா உந்தன் செய்கை வீணடா
காதல் இசையை இசைத்து மனதைக் காட்டவா
சாதல் இல்லை என்று சிந்து பாடவா
உறவு கொண்டு எந்தன் மனதைத் தேற்றவா
உள்ளம் துள்ள துள்ள என்னை ஆளவா
இசையில் இசைக்கும் ஒலியில் மகிழ்ச்சி பெருகும்
இசையில் தெரிக்கும் ஒலியில் உணர்ச்சி தெரியும்
அசைந்து நடக்கும் நடையில் உன்ஆண்மை மிளிரும்
ஆசை வழியும் மனத்தில் என்வலியும் குறையும்.....
-K. BANUMATHINACHIAR SIVAGIRI