tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-13.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-13.04.25

 

அன்புடையீர்,


 வணக்கம். தமிழ்நாடு இ பேப்பர் 13.4.25 அன்றைய நாளிதழுடன் கொடுக்கப்பட்ட சினித்துளி மிகவும் அருமை. ஒவ்வொரு பக்கத்திலும் திரைப்பட உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உதவியாக இருந்த அருமையான புத்தகம். பாராட்டுக்கள். தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற மேற்கு வங்கலத்தில் நடந்து செய்தியை படித்து அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் இன்றைய நாள் மிக அழகாக தொகுத்து எனக்கு கொடுத்தது. திருக்குறள் மிகவும் அருமை அதன் பொருளுடன் படிக்கும் போது உற்சாகமாக உள்ளது. பங்குனி உத்திர திருவிழா நடந்த இடங்களையும் அதில் வந்த கடவுள்களின் சிற்பங்களையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் என்று திருச்சியில் நான் வாழ்ந்த காலத்தை நினைவுக்கு கொண்டு வந்த அருமையான தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள். சுண்டைக்காய் வற்றல் எவ்வாறு நம் உடலுக்கு நல்லவை செய்யும் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் விரிவாக சொன்னது பாராட்டுக்கள். தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு என்ற செய்தி ஆவலுடன் படிக்க வைத்தது. வாட்ஸ் அப்பில் இனிமேல் ஸ்கேனிங் மூலம் மோசடி செய்வார்கள் என்ற எச்சரிக்கை தகவல் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது இன்ஸ்டாகிராமில் பதின்வயது பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு என்று தகவல் எல்லோருக்கும் பயனுள்ள தகவல். மனம் நிறைந்த பாராட்டுக்கள். தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த பாஷ்யம் என்கிற ஆர்யா பற்றிய வரலாறு மிகவும் அருமை. புதிய புதிய தகவல்களாக தலைவர்களின் வரலாற்றுச் செய்திகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வழக்கம்போல் பல்சுவை களஞ்சியம் மிக அருமையான தகவல்களையும் சிரிப்பதற்கு என்று மீம்ஸ் ஜோக்ஸ் என்று மிக அருமையான செய்திகளையும் கொடுத்தது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. ஜோதிடம் அறியலாம் பகுதியில் வந்த பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் பார்ப்பது எளிய வழியை சொல்லிக் கொடுத்தது மிகவும் அருமை. எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்ற தகவல் மிக மிக பயனுள்ள தகவல். மானாமதுரை செல்வ முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்த நிகழ்ச்சி புல்லரிக்க வைத்தது. வேலை வாய்ப்பு கார்னர் மிகவும் அருமை நல்ல பயனுள்ள தகவலாக உள்ளது ராசிபலன் மிகவும் அருமை இந்த வாரம் எப்படி இருக்கும் என்று மிக துல்லியமாக கணித்து சொன்னதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை தமிழகம் முதலிடம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பார்த்து சந்தோஷமாக இருந்தது .மிக அருமையான தகவல் ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்தவுடன் தீவிரவாதம் எப்போது தீரும் என்ற ஒரு ஏக்கம் வந்தது. உலகத்தில் நடக்கும் வரி விதிப்பு பற்றி மிக அருமையான தகவலாக இருபதாம் பக்கத்தில் சொன்னது பாராட்டு கூறியது அதிகரிக்கும் வர்த்தகப் பதற்றம் என்று அமெரிக்க பொருள்களுக்காக வரியை 125 சதவிகிதமாக சீனா உயர்த்தியது என்ற செய்தியை அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது இப்படி எல்லா செய்திகளையும் அழகாக தொகுத்து கொடுத்து ஞாயிறு விடுமுறை என்று எங்களுக்கு இருந்தாலும் விடுமுறை இல்லாமல் உழைக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 நன்றி 

-உஷா முத்துராமன்