tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-20.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-20.04.25


அன்புடையீர் 


வணக்கம். 20.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் இதழுடன் கொடுக்கப்பட்ட பன்முகம் மிகவும் அருமை. ஒவ்வொரு பக்கத்திலும் அருமையான புதுமையான செய்திகளை கொடுத்து ஒரு முறை இந்த இருமுறை படிக்க வைத்த நல்ல தரமான இதழ். பாராட்டுக்கள்.


இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு நல்ல செய்தியை அழகாக தொகுத்து சொன்னது பாராட்டுக்குரியது கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்ற நடிகர் விஜய் அவர்களின் பேச்சு படிக்கும் போது உண்மை என்று மனம் சொன்னது.


எத்தனை முறை படித்தாலும் அலுக்காத மகிழ்ச்சியான பொருளைத் தரும் திருக்குறளை படிக்க படிக்க இன்பம் மனதில் பொங்கி வருவது உண்மை. விவசாயிகள் நில உடமை பதிவு என்ற செய்தியும் மற்ற அனைத்து செய்திகளும் படிக்கும் போது மனதுக்குள் பலவித எண்ணங்கள் வந்து இன்றைய நாளினை அழகாக செலவழிக்க வைத்தது.


நாவல் பழம் மிகவும் ஒரு அருமையான பழம் அதை சாப்பிடுவதால் பல நன்மைகள் அறியும் என்று நலம் தரும் மருத்துவ பகுதியில் தெரிந்து கொண்டவுடன் கண்டிப்பாக நாவல் பழத்தை எங்கு கிடைத்தாலும் வாங்கி தினமும் முடிந்தால் சாப்பிட வேண்டும் என்று தீர்மானம் செய்ய வைத்த அருமையான செய்தி சென்னையில் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது கட்டணம் எவ்வளவு என்ற செய்தியை ஆவலுடன் படிக்க வைத்தது.


அரசாங்கத்தில் செல்வமகள் திட்டத்திற்கு 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம் என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது இதனால் அந்த குழந்தைகள் நல்ல பலன் பெறுவார்கள். ரூபாய் 2000 யு பி ஜி பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி என்ற மத்திய அரசின் விளக்கம் அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியை ஆவலுடன் படிக்க வைக்கும் இன்று பி எஸ் ராமையா அவர்களின் வரலாறு மிக அருமையான செய்தி இதுவரை கேள்விப்பட்டிராத புதிய தகவலாக எண்ணி படித்தேன்.


ஒவ்வொரு நாளும் விழித்துக் கொண்டு இருக்கும் பல்சுவை களஞ்சியம் பகுதி மனதை கொள்ளை கொள்வது உண்மை என்று முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் என்று அருமையான பட்டியலிட்டது பயனுள்ள தகவல் விடுகதையும் ஜோக்ஸ் மிக அருமையாக என் நேரத்தை நல்லபடியாக செலவழிக்க உதவியது.


ஜோதிடம் அறிவோம் பகுதியில் எந்த நட்சத்திரத்துக்காரர்கள் எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருப்பார்கள் என்று மிக அழகாக சொன்னவுடன் நம்முடைய நட்சத்திரத்தை சரிபார்த்துக் கொள்ள மிக துல்லியமாக சொல்லப்பட்ட அருமையான செய்தியாக எண்ணி படிக்க வைத்தது.


வழக்கம்போல் தமிழ்நாடு இ பேப்பரின் 16 ஆம் பக்கம் அருமையான கடவுள் பற்றிய செய்திகளும் படங்களும் உள்ளத்தை கொள்ளை கொண்டன.


ராசிபலன் மிக துல்லியமாக இந்த வாரம் எப்படி இருக்கும் என்று சொன்னது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


ரூபாய் 100 கோடியில் நவீன சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் என்று அமைச்சர் அறிவித்தது சுற்றுலா செல்பவர்களுக்கு மிக மிக பயனுள்ள நல்ல வசதியான தகவலாக இருக்கும். உலக பாரம்பரிய தினம் நீலகிரி மலை ரயில் கொண்டாட்டம் என்று படத்துடன் பார்க்கும்போது நானும் அந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற்றது போன்ற ஒரு மன மகிழ்ச்சி வந்தது.


மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் என்ற செய்தி அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது மாணவர்களை இப்படி தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அந்த ஆசிரியரே சஸ்பெண்ட் செய்தது மிக மிக நல்ல செய்தி.


வெளிநாட்டுச் செய்திகளை மிக அழகாக கொடுப்பதில் தமிழ்நாடு இ பேப்பருக்கு நிகர் தமிழ்நாடு இ பேப்பர் தான். ஏப்ரல் 30-க்குள் 80 ஆயிரம் ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய பாகிஸ்தான் என்ற செய்தியை அதிர்ச்சியுடன் படித்தேன். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று எலான் மஸ்க் தகவல் சொன்னது ஆர்வமுடன் படிக்க வைத்தது.


ஒவ்வொரு புதிய விடியலிலும் புதிய உற்சாகத்துடன் தொடங்க அருமையான செய்திகளை அழகாக சுட சுட காபி போல கொடுத்து மகிழ வைக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்