இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் கட்டுரை பல தகவல்களை அறிய வைத்தது. அன்பழகன் எழுதிய காதல் பயணம் தொடர்கதை படித்து நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. சசிகலா பெருமாள் எழுதிய சித்திரையின் பிறப்பை பற்றி எழுதி இருந்த கட்டுரை படித்தேன் தமிழ் வருடம் பிறக்கும் வேலையில் அறியாத பலவிதமான நல்ல தகவல்களை அறிய வைத்ததற்கு நன்றி. தங்கம் விலை உயரும் செய்தி பலவிதமான இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கும்.
-கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி